நளினி, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை சிறைகளில் இருந்து விடுவிப்பதாக ஜெயலலிதா அறிவித்துள்ளமையானது, இந்திய காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்வதாக இந்திய உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் அவர்கள் ஏற்கனவே 20 ஆண்டுகள் சிறையில் இருந்தமையால், அவர்கள் உள்ளடங்களாக ராஜிவ் கொலை வழக்கு தொடர்பான ஏழு பேரை சிறைகளில் இருந்து விடுவிக்கவிருப்பதாக ஜெயலலிதா அறிவித்திருந்தார். எனினும் இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறது.
எவ்வாறாயினும் ஜெயலலிதாவின் அறிவிப்பும், காங்கிரஸின் எதிர்ப்பும், இந்திய பொது மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீதான வெறுப்புணர்வை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜெயலலிதாவின் அறிவிப்பு காங்கரஸ{க்கு மிகுந்த நெருக்கடியை கொடுக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.




0 Responses to ஜெயலலிதாவின் அறிவிப்பு காங்கிரசுக்குப் பெரும் பாதிப்பு!