Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பேரறிவாளன்,சாந்தன்,முருகன்,நளினி உட்பட்ட தமிழர்களை விடுதலை செய்யும் அறிவிப்பை தமிழக முதல்வர் ஜெ வெளியிட்டார்.இது தமிழ் உணர்வாளர்கள் உட்பட்ட மனிதநேய ஆர்வலர்கள் அனைவரையும் உற்சாகப்படுதியது. இதன் உச்சமாக சேலம் அரசு கலை கல்லூரி அருகில் இருக்கும் அண்ணல் அம்பேத்கர் சிலை முன்பு திரண்ட செந்தில் கவிதா ஜோடி அங்கேயே மாலை மாற்றி சாதி மறுப்பு திருமணத்தை செய்து அசத்தினர்.

அவர்களிடம் பேசியபோது, 'நாங்கள் நாகப்பட்டினம் பரசலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள்.நான் தலித் சமு தாயத்தை சேர்ந்தவன். கவிதா வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். நாங்கள் இருவருமே பட்டதாரிகள்.. .காதலித்து வந்தோம்...இருவீட்டிலும் எதிர்ப்பு இருந்தது. எனவே எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தோம்.இங்கே தோழர்களுடன் தங்கி இருந்தோம்.

இந்த சமயத்தில் நம் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்று அறிவிப்பு வர இந்த நல்ல நாளில் எங்கள் வாழ்கையை தொடங்கினால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்,எங்களுக்கு பிறக்க போகும் வாரிசுகளுக்கு நல்ல தமிழர் உணர்வை ஊட்டியும் வளர்க்க முடியும் என கருதி இந்த நாளில் திருமணம் செய்துகொண்டோம்.அதுவும் சாதிக்கு எதிராக போராடிய நம் மாமேதை அம்பேத்கர் சிலை முன்பு சாதிமறுப்பு திருமணம் செய்து வாழ்கையை தொடங்கியது பெரும் மகிழ்ச்சி' என்றனர் இருவரும்.

அதன்பின் அவர்கள் பட்டாசுகள் வெடித்தும்,பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.


அப்போது வழக்குரைஞர் தமயந்தி,திராவிடர் விடுதலை கழகம்,ம.தி.மு.க,மக்கள் விடுதலை, த.ஓ.வி.இ, தமிழ் தேச பொதுவுடைமை கட்சி உட்பட்ட பல்வேறு அமைப்பினர் அவர்களுடன் இருந்தனர்.

- இளங்கோவன்

0 Responses to மூன்று தமிழர் விடுதலை-சந்தோசத்தை பகிர சாதிமறுப்பு திருமணம்! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com