Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் தேநீர் பிரச்சாரத்திற்கு போட்டியாக ராகுல் காந்தியின் முதல் எழுத்துக்களைக் கொண்டு 'ராகா பால்' பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அரசியலுக்கு வரும் முன்னர் தேநீர்க் கடை வைத்திருந்தால், காங்கிரஸ் கட்சியினர் அவரை மட்டம் தட்டும் விதமாக கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். எனினும் இதனையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மோடி, 'தேநீர் விற்பவன் ஏன் ஒரு நாட்டின் பிரதமராக கூடாதா?' எனக் கூறி தேநீர் அருந்திக் கொண்டே பிரச்சாரம் செய்யும் நூதன திட்டத்தை தொடங்கினார். இத்திட்டத்தின் கீழ் மோடி தேநீர்க் கடையொன்றிலிருந்து பிரச்சாரம் செய்யும் போது குஜராத் மாநிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தேநீர்க் கடைகளில் உள்ள தொலைக்காட்சிகள்  வழியாக அவரது பேச்சு நேரடியாக ஒளிபரப்படுகிறது.  அதோடு ந.மோ எனும் பெயரில் தேநீரும் விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையிலேயே மோடியின் இந்த தேநீர் பிரச்சாரத்திற்கு போட்டியாக 'ரா கா' என பால் வழங்கும் பிரச்சாரத் திட்டத்தை தொடங்கியுள்ளது உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சி.

அம்மாநிலத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கோல்கர் எனும் இடத்தில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ள இப்பிரச்சாரத்தின் போது, மோடியின் தேநீர் உடலுக்கு நல்லதல்ல. மோடி பிரதமராவது நாட்டுக்கும் நல்லதல்ல என கூறிவரும் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி படம் போட்ட பேப்பர் கப் மூலம் ராகா பால் விநியோகம் செய்து வருகின்றனர்.

0 Responses to மோடியின் 'ந.மோ' தேநீருக்கு போட்டியாக 'ரா.கா' பால் விநியோகம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com