எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய உயிருக்கும், குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வடக்கு மாகாண சபை அண்மையில் அனந்தி சசிதரனுக்கு வழங்கியிருந்தது. ஆனாலும், அவருக்கு பல்வேறு தரப்புக்களிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது.
இதனிடையே, இலங்கையின் இறுதி மோதல்களின் போது அரச படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்பதை சர்வதேசத்துக்கு அறிவிக்க கோரும் தீர்மானமொன்றை வடக்கு மாகாண சகையில் அனந்தி சசிதரன் முன்மொழிந்திருந்தார். அதுவும், பெரும் வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளப்போவதில்லை: அனந்தி சசிதரன்