Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மேல் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் தமது பலத்தினை நிரூபிக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் பேசும் மக்கள் துன்பப்பட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் நாம் மக்களுக்காக போராடினோம். அந்த போராட்டம் இன்றும் சுறுசுறுப்பாக தொடர்கிறது. நாம் மக்களுடன் இருந்தபோதும், இருக்கும்போதும் எப்போதும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களுக்கும், துன்பம் விளைவித்த கூடாரத்தை சேர்ந்தவர்களுக்கும் மனசாட்சியுள்ள மக்களால் ஒருபோதும் வாக்களிக்க முடியாது. ஆகவே எதிர்வரும் தேர்தலில் மக்கள் தீர்க்கமாக வாக்களிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பு மனுவை நேற்று புதன்கிழமை தாக்கல் செய்தபின் ஊடகங்களிடம் பேசிய போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எமது பலம் எதிர்வரும் தேர்தலில் இன்னமும் அதிகரிக்கும். இதன்மூலம் இந்த நாட்டிலே ஆளுகின்ற அரசையும், எதிர்கட்சிகளையும் திரும்பி பார்க்க வைக்க வேண்டும். நாங்கள் அரசியல் ரீதியாக பலம் பெறாவிட்டால், இங்கே எவரும் எங்களை மதிக்க போவது இல்லை. இது தமிழ் பேசும் மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றார்.

மேல் மாகாணத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி பலமுள்ள கட்சியாக உருவாக வேண்டும் என்று வடக்கு கிழக்கிலுள்ள மக்களும், மலையக மக்களும் விரும்புகின்றனர். அங்குள்ள எமது உறவுகளின் விருப்பத்தினை மேல் மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் நிறைவேற்ற வேண்டும். அதன்மூலம், அதிக பிரதிநிதித்துவத்தை பெற்று எமது பலத்தை நிரூபிக்க வேண்டும்என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழ் பேசும் மக்கள் தமது பலத்தினை நிரூபிக்க வேண்டும் : மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com