ராஜீவ் கொலை குற்றச்சாட்டில் சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, தமிழக அரசும் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டிருக்கிறது. அதற்கு முன், சிறையில் இருக்கும் சாந்தனுக்கு அவருடைய வழக்கறிஞர் மூலமாக சில கேள்விகளைக் கொடுத்தனுப்பி எடுத்த பேட்டி.
ராஜீவ் காந்தி வழக்கு பற்றி?
நியாயமான முறையில் நடந்திருக்க வேண்டிய ஒன்று. முக்கியமான யாரும் கைதுசெய்யப்படவில்லை என்று சிறப்புப் புலனாய்வுக் குழுவில் பணியாற்றிய இரண்டு பேரே சொல்லும் அளவுக்குத்தான் அது இருந்தது.
முறையான விசாரணை நடைபெற்றதா?
தடா நீதிமன்ற விசாரணையின்போது 'சார்ஜ் ஃபிரேமிங்’ எனப்படும் குற்ற வனைவின்போது மட்டுமே செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தினசரி ஊடகங்களில் அப்போது வெளியாகின. ஆனால், எங்கள் தரப்பு வாதங்களின்போது பாதுகாப்புக் காரணம் என்று கூறி செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனது தரப்பு நியாயங்கள் மக்களுக்குத் தெரியாமலே போய்விட்டது.
உங்களுக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தம் இல்லையா?
சிரிப்புத்தான் வருகிறது. ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட யாருமே கைது செய்யப்படவில்லை என்பதே உண்மை. சம்பவ இடத்தில் இருந்த நளினி அக்காகூட சதியில் சம்பந்தப்பட்டவர் இல்லை.
உங்கள் மீது என்னதான் குற்றச்சாட்டு?
சதித்திட்டத்தில் ஈடுபட்டேன், சிவராசனின் நிழலாக இருந்தேன் என்று மேம்போக்காகத்தான் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
சி.பி.ஐ., தடா நீதிமன்றம் போன்றவை தவறு இழைத்தன என்று நினைக்கலாம். ஆனால், உங்களுக்கு தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் கூட உறுதி செய்ததே?
வேதனைக்குரியது இதுதான். இறந்து போன எதிரி என்று சி.பி.ஐ. சொல்லும் திருச்சி சாந்தனையும், என்னையும் உச்ச நீதிமன்றம் ஒன்றாக்கிவிட்டது. என்னைப் பற்றிய பல பிரச்னைகளில் இரண்டு நீதிபதிகள் முரண்பட்ட செய்திகளைச் சொன்னார்கள்.
ஏன் இந்தியாவுக்கு வந்தீர்கள்?
எனக்குத் தரப்பட்ட பணி ஐரோப்பிய நாடு ஒன்றில்தான். இலங்கை தலைநகர் மூலமாகப் பயணம் செய்வது பாதுகாப்பானதாக இல்லை என்பதால் நானாகவே முடிவெடுத்து இந்தியாவுக்கு வந்து சேர்ந்தேன்.
வெளிநாட்டுக்குச் செல்லும் வேலையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லையே..?
தவறு. நான் பயணம் செய்ய உதவிய டிராவல் ஏஜென்ட் மற்றும் அவரை ஏற்பாடு செய்துதந்தவர் என இருவரும் சாட்சியாக விசாரிக்கப்பட்டனர். இவர்கள் மட்டுமன்றி இது சம்பந்தமாக புலனாய்வு செய்த ஆய்வாளரும் நீதிமன்றத்தில் சாட்சியளித்திருக்கிறார்.
அப்படி இருந்தும் நான் வெளிநாடு போக வந்ததை மறுத்துவந்த சி.பி.ஐ., ஒரு கட்டத்தில் 'வெளிநாடு போக முயற்சித்தது உண்மை; சதித்திட்டம் நிறைவேறியதும் தப்பிப்போகும் முயற்சியே அது’ என்றது.
உச்ச நீதிமன்றம் இதைப்பற்றி என்ன சொன்னது?
சி.பி.ஐ-யை அப்படியே வழிமொழிந்தது. இதை மட்டுமல்ல... நான் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டிருந்த சேதியைக்கூட கண்டுகொள்ளவில்லை.
சட்டவிரோதக் காவல் தெரிந்து விடும் என்றுதான் நான் கைது செய்யப்பட்ட வீட்டில் இருந்த நால்வரும், சென்னை கொட்டிவாக்கத்தில் இருந்து பொருட்கள் சில கைப்பற்றப்பட்ட போது சாட்சியாக இருந்த நால்வரும் நீதிமன்றத்துக்கு சாட்சியமளிக்க அழைத்து வரப்படவில்லை.
இவர்களில் மூன்று பேர் சிவராசனின் சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள். சி.பி.ஐ-யால் பிடிக்கப்பட்ட எத்தனையோ பேர் அப்போது சைதாப்பேட்டை சிறப்பு முகாமிலும், பிறகு செங்கல்பட்டு சிறப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அந்த மூவர் மட்டும் சுதந்திரமாக விடப்பட்டதன் இரகசியம் சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும்.
இப்போது இவ்வளவு தகவலையும் கூறும் நீங்கள், ஏன் முன்னரே வாய்திறக்கவில்லை?
இங்கு எனக்கு தனிப்பட்ட ரீதியில், நான் சொல்லக்கூடிய வேலைகளைச் செய்ய உறவினர்களோ, நண்பர்களோ கிடையாது. அடுத்து வழக்கு சம்பந்தமாக எனக்குத் தெரிந்த எதையும் யாருடனும் பகிர்ந்துகொள்ளும் விருப்பமும் இல்லை.
அதையும் மீறி 2007-ல் அப்போதைய குடியரசுத் தலைவருக்கு ஒரு பெரிய மடல் விடுத்தேன். அதில் இவற்றைப் பேசியுள்ளேன். அதை நூலாக்கும் பணியில் இப்போது எனது வழக்குரைஞர் அண்ணன் தடா சந்திரசேகரனும், தம்பி ராஜீவ் காந்தியும் ஈடுபட்டுள்ளனர்.
உங்கள் பெற்றோரையோ, உடன் பிறப்புகளையோ அழைத்திருக்கலாமே..?
அவர்களை இந்த நிலையில் நேரடியாகச் சந்திக்கும் தைரியம் எனக்கு இல்லை. கடிதம் மூலமாகவே கதைத்து வந்தேன். இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு அதுவும் இல்லை.
இப்போது அவர்களின் இருப்பிடமே தெரியவில்லை. என்மீது பாசமும், மதிப்பும் வைத்திருக்கிற உணர்வாளர்களும், மனித உரிமைப் போராளிகளும் மட்டுமே எனக்கு இப்போது சொந்தம்.
உயர் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றுள்ளீர்கள் இது நிரந்தரமா?
எனது விடுதலைச் செய்தி விரைவில் ஊடகங்களில் வரும், ஒட்டுமொத்த தமிழினமும் எங்களின் பக்கம் நிற்கிறது.
தமிழக மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இந்த உயிர் நீங்கள் போட்ட பிச்சை. கட்சி, மத, சாதி வேறுபாடுகளை மறந்து மொத்த தமிழகமும் எங்களுக்காகக் குரல் கொடுத்தது. வெளியில் தெரிந்தும், மறைமுகமாகவும் பல தலைவர்கள், பிரமுகர்கள் உழைத்திருக்கிறீர்கள்.
யாருடைய பெயரையும் இப்போது அவசரத்தில் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஒரு பெயர் விடுபட்டாலும் நன்றி மறந்தவன் ஆகி விடுவேன். பாடுபட்ட அனைவருக்கும் நன்றி.
சிறையில் தியானமும், எழுத்தும் எனக்கு ஆறுதலாக அமைந்தன. ஏற்கெனவே ஐந்து நூல்கள் வெளியாகியுள்ளன. சிறைப்பூக்கள், உள்ளளி இதழ்களில் ஆசிரியப் பணி நல்ல முறையில் நடந்தது. இலக்கியப் போட்டிகளில் பல பரிசுகளையும் பெற்றிருக்கிற நான், தனியாக அடைக்கப்பட்ட நாட்களை ஒரு தவக் காலமாகவே நினைத்தேன்.
அனுபவங்களை எழுதியுள்ளேன். 11.8.2011-ல் இருந்து 30.8.2011 வரையிலான அந்த நாட்களில் நடந்த சிலவற்றையும் பழைய நினைவுகளையும் எழுதியுள்ளேன்.
ஒரு சிறுகதைத் தொகுப்பும், கவிதைத் தொகுப்பும் வெளியிடும் வகையில் எழுதியுள்ளேன். ஒரு வரலாற்று நாவலும், சிறையாளிகள் இருவரின் வாழ்க்கை நாவலும் மனதுக்குள் உருக்கொண்டன.
பார்ப்போம்... இயற்கை அனுமதிக்கும் போது அவற்றை நூலாக்குவேன்.

0 Responses to எனது விடுதலைச் செய்தி விரைவில் ஊடகங்களில் வரும்! ஒட்டுமொத்த தமிழினமும் எங்களின் பக்கம்!- சாந்தன் பேட்டி