தனது பெற்றோருடன் ஒரு தவறும் செய்யாத தானும் 23 வருடங்களாக கஷ்டப்பட்டதாக தெரிவித்த ஹரித்ரா, தனக்காகவேனும் தன் பெற்றோரான நளினி, முருகனை விடுதலை செய்யும் படி உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.
தன் பெற்றோர் அப்பாவிகள் என தான் நம்புவதாகத் தெரிவித்த மேலும் ஹரித்ரா, அவர்களுக்கான தகவலாக "தைரியமாக இருங்கள். உங்களுக்காக நான் எப்போதும் காத்திருப்பேன் என்று ஆறுதல் கூறியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி - முருகன் தம்பதியரின் மகள் ஹரித்ரா (வயது 22). இவருடன், 'தி இந்து' செய்தியாளர் பார்வதி மேனன் `ஜி-மெயில் சாட்' மூலம் பேசும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த இணைய உரையாடலில் ஹரித்ரா மேலும் கூறுகையில்,
நமக்குப் பிரியமானவர்களைப் பிரிந்து வாடுவது எப்படிப்பட்ட உணர்வு என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், தாய் - தந்தை இல்லாமல் நான் அத்தகைய வலியைத்தான் அனுபவித்து வருகிறேன்.
என்னுடைய பெற்றோர் அப்பாவிகள் என நம்புகிறேன். 23 வருடங்கள் கஷ்டப்பட்டது அவர்கள் மட்டுமல்ல, எந்தத் தவறும் செய்யாத நானும்தான். இந்நிலையில், எனக்காகவாவது எனது பெற்றோரை மன்னித்து, விடுவிக்கும்படி ராகுல் காந்தியை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
என் பெற்றோரின் விடுதலைச் செய்தியைக் கேட்டு, அவர்களோடு இணையப்போவதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், மறுநாளே நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததைக்கேட்டு மனம் உடைந்து போனேன் என்றார்.
தனது பெற்றோருக்கான தகவலாக, "தைரியமாக இருங்கள். உங்களுக்காக நான் எப்போதும் காத்திருப்பேன் என்று ஆறுதல் கூறினார் ஹரித்ரா.
எனக்கு அரசியால் புரியாது. எனது பெற்றோரின் மரண தண்டனையைக் குறைக்க ஆதரித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதே எனது முதல் விருப்பம். அவர்கள் இல்லாமல் 22 வருடங்களாக துன்பத்தில் இருக்கிறேன்.
எனவே, அவர்கள் விடுதலைக்கு ஆதரவு தாருங்கள் என்று ஹரித்ரா கேட்டுக்கொண்டார்.
நளினி - முருகன் உருக்கமான சந்திப்பு
இந்த நிலையில் வேலூர் ஜெயிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் நளினி, முருகன் சந்திப்பு இன்று நடந்தது.
வேலூர் நிலஅபகரிப்பு டி.எஸ்.பி. பிரபாகரன் தலைமையிலான பொலிசார் முருகனை பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.
காலை 7.30 மணி முதல் 8 மணி வரை முருகனும் நளினியும் சந்தித்து பேசினர்.
அப்போது தூக்குதண்டனை ரத்து குறித்தும், லண்டனில் டாக்டருக்கு படிக்கும் மகள் அரித்ரா பற்றியும் உருக்கமாக பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது.
விடுதலை தடை செய்யப்பட்டது குறித்து பேசிய போது நளினி கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
சந்திப்புக்கு பின்னர் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த சந்திப்பு சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Responses to நளினி, முருகனுக்கு மகள் ஹரித்ரா ஆறுதல்! - நளினி - முருகன் உருக்கமான சந்திப்பு