Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் இரகசியத் தொலைத் தொடர்பு புலனாய்வு பற்றி வெளியுலகுக்கு தெரியப்படுத்திய எட்வார்ட் ஸ்னோவ்டன், ரஷ்யாவின் கிளாஸ்கோவ் பல்கலைக் கழகத்தின் மாணவர் கழகத் தலைவராக தேர்தலில் வெற்றி பெற்று தெரிவாகியுள்ளார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸின் முன்னாள் பணியாளரான எட்வார்ட் ஸ்னோவ்டன், அமெரிக்காவின் இரகசிய இணைய மற்றும் தொலைபேசி ஒட்டுக் கேட்பு குறித்து தகவல் வெளியிட்டதால் பிரபலமடைந்தார்.

அமெரிக்காவினால் அச்சுறுத்தலுக்கு உள்ளானதால் ரஷ்யாவில் தற்காலிகமாக அரசியல் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில் பிரபல கிளாஸ்கோவ் பல்கலைக் கழகத்தின் மாணவர் பிரிவு கௌரவத் தலைவராக எட்வார்ட் ஸ்னோவ்டன் வாக்கெடுப்பின் மூலம் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக இப்பதவியில் நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா, சைக்கிள் வீரர் கிராம் ஓப்ரீ போன்றோர் இருந்துள்ளனர்.

0 Responses to எட்வார்ட் ஸ்னோவ்டன் ரஷ்ய பல்கலைக் கழகமொன்றில் கழகத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com