Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணையை முன்வைக்க சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் உறுதிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச யுத்தக் குற்றத்தை வலியுறுத்தி அமெரிக்கா சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணையை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கவுள்ளது.

இதற்கு சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், பாகிஸ்தான், ஈரான், இந்தோனேசியா போன்ற நாடுகள் இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவிருப்பதாக சிறிலங்காவிடம் உறுதியளித்துள்ளன.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகள் இணைந்து, அமெரிக்காவின் பிரேரணையை செல்லுபடியற்றாக்கும் வகையில் மாற்று பிரேரணை ஒன்றை முன்வைக்கவிருப்பதாக தெரியவருகிறது.

இதில் மறுசீரமைப்பு, அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை அந்த நாடுகள் வரவேற்றுள்ளதுடன், மேலும் இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்ய கால அவகாசம் கோரி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேபோன்ற ஒரு பிரேரணை கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையில் ஜப்பான் தலையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக மற்றொரு பிரேரணை முன்வைக்க சிறீலங்கா திட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com