காணாமற்போன மற்றும் இராணுவத்தில் சரணடைந்தவர்களைத் தேடும் உறவுகளுக்குத் தெளிவான நிலைப்பாட்டினை கூற வேண்டுமென வலியுறுத்துவதற்காக ஜெனீவா மாநாட்டில் நான் கலந்துகொள்ள மீண்டும் ஜெனீவா செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.
மக்களின் பிரதிநிதியான என்னை ஜெனீவா செல்லவிடாது நிறுத்துவதென்பது நடைமுறைச்சாத்தியமற்ற விடயம் என நினைக்கின்றேன்' என்றும் அனந்தி குறிப்பிட்டுள்ளார்.கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியினிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
அனந்திக்கு ஜெனீவா செல்வதற்கான விசா மறுப்பு என்ற பிரசாரத்தினை அரசாங்கம்; தென்னிலங்கை ஊடகங்களின் ஊடாகப் பரப்பி வருகின்றது. மக்களின் பிரதிநிதியான என்னை ஜெனீவா செல்வதற்கான விசா மறுப்பு என்று செய்தியினை வெளியிடுவதினால் மக்களின் பிரச்சினைகளை நான் ஜெனீவா மாநாட்டிற்குக் கொண்டு செல்லக்கூடாது என்பதற்காகவே இவ்வாறான பொய்யான செய்தியினை இலங்கை அரசு வெளியிடுகின்றது. இது உண்மைக்குப் புறம்பான செய்தி' எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே ஜெனீவாவினில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற முன்னெடுப்பிற்கான பிரச்சாரத்திற்காகக் கூட்டமைப்பு எம்பிக்களான சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் சுமந்திரன் சகிதம் ஜெனீவாவில் பரப்புரைகளை மேற்கொண்டுவிட்டு தற்போதே அனந்தி இலங்கை திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to அனந்தி மீண்டும் ஜெனீவாவிற்கு! அதிர்ச்சியில் இலங்கை அரசு!!