Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டு வந்திருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், தன்னுடைய விஜயம் பற்றி பிரித்தானியாவிடம் எடுத்துரைத்துள்ளார்.

பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய விடயங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஷூவையரை, நிஷா தேசாய் பிஸ்வால் இலண்டனில் நேற்று திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார்.

இதன் போது, இலங்கையின் உள்ளக நிலைமைகள் திருப்தியில்லாமல் இருப்பது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளதாக பிரித்தானியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் பிரித்தானியாவின் ஆதரவோடு வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to இலங்கை நிலவரங்கள் தொடர்பில் பிரித்தானியாவிடம் அமெரிக்க இராஜங்கப் பிரதிநிதி எடுத்துரைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com