Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டக் காரர்கள், தங்களது கால வரையறையற்ற உண்ணாவிரதப்  போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கூடங்குளத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டு உள்ள வழக்குகளைத் திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை உதயகுமார் உள்ளிட்ட அணு உலைக்கு எதிரான மக்கள் துவங்கினர்.

இன்றுடன் 5 வது நாளாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வரும் வேளையில், உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டவர்களின் உடல் நிலை மிகவும்  மோசமடைந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அந்த ஊர் சமூக பெரியவர்கள் போராட்டக்காரர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட கேட்டுக் கொண்டதன் பேரில், போராட்டக்காரர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டதாகத் தெரிய வருகிறது.

0 Responses to கூடங்குளம் போராட்டக் காரர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com