இலங்கையில் காணப்படுகின்ற சமாதானமான சூழ்நிலையை ஏற்றுக் கொள்ள முடியாத தரப்பினரே இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றங்களை சுமத்துவதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
66வது சுதந்திர தின நிகழ்வு கேகாலையில் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி உள்ளிட்ட பலரைக் கொலை செய்தனர். ஆனால் அவர்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க சர்வதேச நாடுகள் முன்வரவில்லை.
ஆனால் தமது அரசாங்கம் விடுதலைப் புலிகளை அழித்தப் பின்னர் வடக்கு மக்கள் உள்ளிட்ட அனைவரும் சுதந்திரமாக வாழ முடிகிறது. இதனைச் சர்வதேச நாடுகளால் பொறுத்துக் கொண்டிருக்க முடிவில்லை. எனவே உள்நாட்டு சமாதானத்தை மீண்டும் குழப்புவதற்காக அவர்கள் இலங்கைக்கு எதிராக பிரேரணையை முன்வைக்கவிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிரான மோதலின் போது காணப்படும் சிக்கல்களை உலகில் பலம் பொருந்திய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் அடிப்படை அற்றது எனவும் அதில் உண்மை கிடையாது. இலங்கை மக்கள் இன்று அனுபவித்துவரும் சுதந்திரத்தை பறிக்க இடமளிக்கப்பட மாட்டாதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சமாதானத்தைக் குழப்புவதற்காகச் சர்வதேச நாடுகள் முயற்சி! சுதந்திர தின விழாவில் மகிந்த!