Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் | 16.03.2014

பதிந்தவர்: தம்பியன் 16 March 2014

மேஷம்
உதிரி வருமானங்கள் பெருகும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். நண்பகலில் பகையன்று நட்பாகலாம். உத்தியோக முன்னேற்றம் உண்டு.

ரிஷபம்
உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும்நாள். வரவு திருப்தி தரும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். வீட்டை பராமரிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். பெற்றோர் மீது பிரியம் கூடும்.

மிதுனம்
உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மதிய நேரத்தில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறலாம். வியாபார விருத்தியுண்டு.

கடகம்
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். ஆதாயம் தரும் வேலையன்றில் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

சிம்மம்
நிலவு வழிபாட்டால் நிம்மதி காண வேண்டிய நாள். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி
தெய்வீகச் சிந்தனை மேலோங்கும் நாள். வெளியூர் பயணமொன்றால் கையிருப்பு கரையும் சூழ்நிலை உண்டு. குடும்பத்தினர்களிடம் கோபமாகப் பேசிவிட்டு பின்னர் வருத்தமடைய நேரிடலாம்.

துலாம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். மாலை நேரம் நண்பர்களால் அன்புத் தொல்லைகள் ஏற்படலாம்.

விருச்சகம்
மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வங்கிச் சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் ஏற்படும். பொது வாழ்வில் புகழ் கூடும். விருந்தினர் வருகை உண்டு.

தனுசு
பற்றாக்குறை தீரும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். தொழிலில் எதிர்ப்பாக இருந்த கூட்டாளிகள் இணக்கத்துடன் நடந்து கொள்வர். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

மகரம்
விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். எந்த முக்கிய முடிவும் குடும்பத்தினர்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம்.

கும்பம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். மறதியால் சில பணிகளை செய்யமல் விட்டுவிடுவீர்கள். நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். எதிர்பார்த்தது போல் எதுவும் முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.

மீனம்
பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும் நாள். வியாபார விருத்திக்கு வித்திடுவீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. கோவில் வழிபாட்டில் அக்கறை காட்டுவீர்கள்.

0 Responses to இன்றைய ராசி பலன் | 16.03.2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com