Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமல் போனோர்களுக்காக போராடிய தாயும் சிறுமியும் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய தலைநகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சிறீலங்காப் படைகளால் கடத்தப்பட்ட, காணாமல் போன உறவுகளைத் தேடி கதறிய சிறுமியையும் தாயையும் விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.

லண்டன் நகரில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்களினது வாசல்தளத்திற்கு (10 DOWNING ST’ ) முன்பாக இன்று மாலை 3 மணியளவில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

தொடரும் இனஅழிப்பின், தமிழர்களின் கையறுநிலையின், தாயகத்தில் தமிழர்களின் இன்றைய நிலையின் ஒட்டு மொத்த குறியீடாக மாறிப் போனார்கள் விபூசிகாவும் அவளது அம்மாவும்…

இக்கவனயீர்ப்பு ஒன்று கூடலில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் அணிதிரளுமாறு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் அழைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.




0 Responses to அதிர்கின்ற​து லண்டன் மாநகரம் - பிரித்தானி​ய தமிழரின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com