Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் | 30.03.2014

பதிந்தவர்: தம்பியன் 30 March 2014

மேஷம்
விரயங்கள் கூடும் நாள். விழிப்புணாச்சியோடு செயல்படுவது நல்லது. வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும். உத்தியோகத்தில் இடமாற்றம், ஊர் மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை உருவாகும்.

ரிஷபம்
செவி குளிரும் செய்தி வந்து சேரும் நாள். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். வங்கிச் சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும்.

மிதுனம்
மனித தெய்வ வழிபாட்டால் மகிழ்ச்சி கூடும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணியை தொடருவீர்கள்.

கடகம்
உற்சாகம் அதிகரிக்கும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். ஸ்தல வழிபாடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள். கொடுக்கல் – வாங்கல்கள் ஒழுங்காகும். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும்.

சிம்மம்

வழிபாட்டினால் வளர்ச்சி காண வேண்டிய நாள். எதையும் சுதந்திரமாகச் செய்ய இயலாது. மனம் புரியாத கவலைகள் தோன்றும். திடீர் செலவுகளைச் சமாளிக்க புதிய கடன்களை வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.

கன்னி
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க இல்லத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பச்சுமை கூடும். தொலைபேசி வழித் தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.

துலாம்
உள்ளத்தில் அமைதி கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பயணத்தால் நல்ல தகவல்களைப் பெறுவீர்கள்.

விருச்சகம்
முன்னோர் வழிபாட்டால் முன்னேற்றம் கூடும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். பிள்ளைகள் வழியில் எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

தனுசு
மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். உங்கள் மணியான யோசனைக்கு நல்ல பாராட்டுக்கள் ஏற்படும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். தாய் வழி ஆதரவு பெருகும்.

மகரம்
முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகள் நம்பிக்கைக்குரியவிதம் நடந்து கொள்வர்.

கும்பம்
தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். வரவு திருப்தி தரும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்.

மீனம்
ஊர் மாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முன்வருவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார விருத்தியுண்டு.

0 Responses to இன்றைய ராசி பலன் | 30.03.2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com