Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகும் மாயமான விமானம் பற்றிய மர்மங்கள் விலகவில்லை. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் நகருக்கு கடந்த 8-ந்தேதி 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், 2 மணி நேரத்தில் தெற்கு சீன கடலுக்கு மேலே பறந்த போது, நடுவானில் மாயமானது. விமான கட்டுப்பாட்டு அறையுடன் ஆன தொடர்பு துண்டிக்கப்பட்டது. மாயமான விமானத்தை இந்தியா, அமெரிக்கா உள்பட 26 நாடுகள் தீவிரமாக தேடின.

இரண்டு வாரங்கள் கடந்தும் விடை தெரியாமல் இருந்த நிலையில், மார்ச் 24-ந் தேதி மலேசிய பிரதமர் நஜீப் ரசாக், தெற்கு இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து சுமார் 2500 கி.மீட்டர் தூரத்தில் அந்த விமானம் கடலுக்குள் நொறுங்கி விழுந்ததாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் ஏற்கனவே இது குறித்து மலேசிய பிரதமரிடம் தெரிவித்திருந்ததை கடந்த மார்ச் 22-25 தேதியிட்ட இதழிலேயே குறிப்பிட்டிருந்தோம். அதன்பின் பிரிட்டிஷ் செயற்கைகோள் அனுப்பிய தகவல் மூலம் இதனை உறுதி செய்து அறிவித்திருக்கிறார் மலேசிய பிரதமர்.

"விமானம் எம்.எச்-370 தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து நொறுங்கி விட்டது என்பதை ஆழ்ந்த சோகத்துடன் உறுதி செய்கிறேன். எனவே பயணிகளை மீட்கும் பணி நிறுத்தப்பட்டு விட்டது. இது குறித்த தகவலை பயணிகளின் குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளோம்'' என்று சோகத்துடன் மலேசிய பிரதமர் சொன்னார்.

விழுந்து நொறுங் கிய விமானம் கடலுக்குள் 20 ஆயிரம் அடி ஆழத்தில் கிடப்பதாகவும், அதிலிருந்து தொடர்ந்து சில சமிக்ஞைகள் வந்துகொண்டிருப்பதாகவும் இங்கிலாந்தின் இன்மர்சாட் நிறுவனம் அறிவித்துள் ளது. விமானத்தின் தகவல் தொடர்பு கருவிகளில் ஒன்று இன்னமும் செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. விமானி மற்றும் விமானி அறையின் கடைசிகட்டத் தகவல்கள் விமானத்தின் கருப்பு பெட்டியில் பதிவாகியிருக்கும் என்பதால் அதனை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  அதற்கான தொழில்நுட்பத்துடன் கூடிய கருவி அமெரிக்கா விடம்தான் உள்ளது.

"விமானத்தின் உடைந்த பாகங்கள் இருக் கும் இடம் தெரியும்பட்சத்தில் அதில் இருந்து வெளிவரும் சமிக்ஞைகள்  உதவியுடன் கருப்புப் பெட்டியை மீட்க முடியும். கருப்புப் பெட்டியின் பேட்டரி தற்போது செயல்பட்டு வருகிறது' என்று அமெரிக்காவின் 7-வது கப்பல்படை அதிகாரி கிறிஸ்புட்டே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கமோ விமானம் விபத்துக்குள் ளானது என்பதை ஏற்க மறுக்கிறது. விமானத்தில் பயணித்தவர்களில் சீனப்பயணிகள் 154 பேர். "விபத்து ஏற்பட்டுள்ளதென்றால் அதற்கான அனைத்து ஆதாரங்களையும் எங்களிடம் அளிக்க வேண்டும்' என  மலேசியாவிடம் சீன துணை வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜீ ஹாங்ஷெங் கேட்டுள்ளார். பயணிகள் இறந்துவிட்டார்கள் என்பதை அவர்களின் உறவினர்கள் தாங்கமுடியாமல் கதறி அழுதுகொண்டிருக்கிறார்கள். "மலேசிய அரசு தவறான தகவல்களைத் தருகிறது' என்று சொல்லி பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகத்தை ஏராள மானவர்கள் திரண்டு சென்று முற்றுகையிட்டு, "பொய் சொல்லாதே' என்றபடி பிளாஸ்டிக் பாட்டில்களை வீசி எறிந்தனர்.

விமானம் மாயமானதிலிருந்து மலேசிய அரசு தெரிவித்து வந்த தகவல்கள்தான், தற்போதைய செய்தியை நம்பமுடியாமல் சீனப்பயணிகளின் உறவினர்கள் கதறுவதற்குக் காரணம். விமானத் தின் பைலட் கேப்டன்... ஜஹாரி அகமதுஷா மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிமின் உற வினர் என்றும், சிறையில் உள்ள அன்வருக்கு ஆதர வாக விமானத்தை பைலட்டே கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தை முதலில் கிளப்பியது மலேசிய அரசுதான். தீவிரவாதிகளுடன் பைலட் டீமும் சேர்ந்து கடத்தியிருக்கலாம் என்றும் மங்கோலியா, சோமா லியா போன்ற நாடுகளில் ஒன்றில் விமானத்தை ரகசியமாகத் தரையிறக்கியிருக்கலாம் என்றும் மலேசிய அரசு சொன்னதுடன், 1000 மீட்டர் ஓடுபாதையில் விமானத்தை இறக்கவும், ஏற்றவும் பைலட் பயிற்சி பெற்றிருப்பதுடன், அது தொடர்பான விவரங்களை தன்னுடைய கம்ப்யூட்டரிலிருந்து அழித்திருக்கிறார் என் றும் மலேசிய அரசு கூறியிருந்தது. அத்தனை பயணி களையும் கொன்று தாங்களும் தற்கொலை செய்து கொள்ளும் வகையிலான தீவிரவாதிகளின் திட்டமாக வும் இருக்கலாம் என்று இப்போது சொல்லப்பட்டது.

விமானத்தின் கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித் தால் மர்மத்துக்கு விடை கிடைக்குமா என்று இது குறித்த வல்லுநர்களிடம் கேட்டால், ""தற்போது கிடைத்து வரும் சிக்னல் என்பது விமானத்தின் சிக்னல்தானா என்பதை உறுதி செய்தால்தான் கருப்புப் பெட்டி பற்றி முடிவு செய்ய முடியும்'' என்கிறார்கள். ""சாட்டிலைட் இமேஜ் துல்லியமான இடத்தை சுட்டிக் காட்டவில்லை. தோராயமான ஒரு பகுதியைத்தான் காட்டுகிறது. அதில் எங்கு விமானத்தின் பகுதி விழுந்து கிடக்கிறது என்பதற்கே கடலில் பல மைல்கள் ஆய்வு நடத்தவேண்டும். அதன்பின் மிக ஆழத்திற்குச் சென்று விமானத்தின் பகுதிகளைத் தேடவேண்டும். அதில் கருப்புப்பெட்டி இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். தற்போதுள்ள தட்பவெப்பமும் காற்றும் அதற்கு சாதக மாக அமையவேண்டும்'' என்று கூறும் ஆஸ்திரேலியா வின் ஏர்மார்ஷல் மார்க் பின்ஸ்கின், ""எங்களால் வைக் கோல் போரில் ஊசியைத் தேடிக்கொண்டிருக்க முடியாது. வைக்கோல்போர் எங்கே இருக்கிறது என்பதைத்தான் இப்போது தேடிக்கொண்டிருக்கிறோம்'' என்கிறார். அதாவது, "விமானத்தின் பாகங்கள் எங்கே என்கிற இடத்தைத்தான் தேடுகிறோம் என்றும், கருப்புப்பெட்டி பற்றி இப்போது எதுவும் சொல்வதற் கில்லை' என்கிறார் வெளிப்படையாக.

மலேசிய அரசு அறிவிப்பை வெளியிட, சீனப் பயணிகளின் உறவினர்கள் கதறியழுது போராட, விமானத் துறையினரும் விஞ்ஞானிகளும் உறுதியான முடிவுக்கு வர முடியாத நிலையில் இருக்க, மாயமான விமானம் குறித்த கேள்விகளுக்கான விடைகள் அந்த விமானம் போலவே ஆழ்கடலில் அமிழ்ந்து கிடக்கின்றன.

-லெனின்

nakkheeran

0 Responses to ஆழ்!கடலில் மாயமான விமானம்! - விடை தெரியாத கேள்விகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com