கிளிநொச்சியின் தருமபுரம் பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட சிறுமி விபூசிகா சிறுவர் நன்னடத்தைப் பிரிவிலும், அவரது தாயார் ஜெயக்குமாரி பூஸா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரம் பகுதியில் வைத்து இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டிருந்த சிறுமி விபூசிகாவும் (வயது 13), அவரது தாயார் ஜெயக்குமாரி பாலேந்திரனும் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
அப்போது, கிளிநொச்சி நீதவான் ஜெயக்குமாரி பாலேந்திரனை மூன்று மாதம் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கினார். அதனையடுத்து அவர் பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். அத்தோடு, சிறுமி விபூசிகாவை சிறுவர் நன்னடத்தைப் பிரிவில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியொருவரை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டே ஜெயக்குமாரி பாலேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்று முன்தினம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிந்த ஜெயக்குமாரியும், விபூசிகாவும் நேற்று பிற்பகல் வரையில் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
இதனிடையே, சிறுமி விபூசிகா மற்றும் ஜெயக்குமாரியின் விடுதலை கோரி வவுனியாவில் இன்று சனிக்கிழமை போராட்டமொன்றை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுக்கவுள்ளது. அத்தோடு, விபூசிகா, ஜெயக்குமாரி ஆகியோரின் கைதின் போது சட்ட நியமங்கள் ஏதும் சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

0 Responses to இராணுவத்தால் கைது செய்யப்பட்ட சிறுமி விபூசிகா சிறுவர் நன்னடத்தைப் பிரிவில்; தாயார் பூஸா தடுப்பு முகாமில்!