Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் உண்மையில் விமானத்திலிருந்த ஒரு நபரினாலோ, அல்லது ஒரு குழுவாலோ கடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவலை மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.

எமக்கு கிடைத்துள்ள புதிய செய்மதி தகவல்களின் படி விமானத்தின் கட்டுப்பாட்டு தொடர்பாடல் தொழில்நுட்பம் அனைத்தும் வேண்டுமென்றே செயலிழக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் விமானத்தை கடத்துவதற்கான செயற்பாட்டாகவே பார்க்க முடியும்.

எனினும் விமானம் மாயமானதாக நம்பப்படும் நேரத்திலிருந்து தொடர்ந்து ஏழு மணி நேரத்திற்கு விமானம் சென்ற பாதை செய்மதி ஒன்றினால் கண்காணிக்கப்பட்டுள்ளது. இதுவரை மீட்பு படைகள் தேடுதல் நடத்திய கடற்பரப்பிற்கு அப்பால் இவ்விமானப் பாதை சென்றுள்ளது.

14 நாடுகள், 43 கப்பல்கள், 58 விமானங்கள் தேடுதலில் ஈடுபட்டிருந்தும் விமானம் விபத்துக்குள்ளானதாக உறுதிப்படுத்தும் உதிரிப்பாகங்கள் எதனியும் கண்டுபிடிக்கவில்லை. தற்போது கிடைத்துள்ள புதிய தகவல்களின் படி குறித்த விமானத்தில் சென்ற பயணிகள், பணியாளர்கள், விமான ஓட்டுனர்கள் என அனைவர் தொடர்பிலும் தனித்தனியாக தற்போது மீண்டும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளோம் என்றார்.

4tamilmedia

0 Responses to மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் பொறிமுறை வேண்டுமென்றே செயலிழக்கப்பட்டுள்ளது - மலேசிய பிரதமர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com