Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறைக்கு சென்ற கனிமொழியை பாராட்டுவதா என்று வெண்ணிற ஆடை நிர்மலா கேள்வி எழுப்பியுள்ளார்.

லோக்சபா தேர்தலில் அதிமுகவிற்காக தேர்தல் பிரசாரம் செய்து வரும் நட்சத்திர பேச்சாளர் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா கூறியதாவது, எம்ஜிஆர் தான் என்னை அதிமுக உறுப்பினர் ஆக்கினார்.

அதிமுகவில் மீண்டும் களமிறங்க வேண்டும் என நினைத்து கடந்தாண்டு ஜெயலலிதாவை சந்தித்து கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன். தமிழக பெண்களுக்கு ஜெயலலிதா நிறைய திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

கர்ப்பிணி பெண்களுக்கு, 12,000 ரூபாய் உதவித்தொகை நடமாடும் மருத்துவமனை, பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்க, வீடு தேடி வரும் அதிகாரிகள் குழு, ஏழை பெண்களுக்கு இலவச திருமணம், தாலிக்கு தங்கம், ஏழை மக்களுக்கு, "அம்மா உணவகம்'என ஒவ்வொரு திட்டத்தையும் ஜெயலலிதா பார்த்து, பார்த்து செயல்படுத்தி வருகிறார்.

இதைவிட ஏழை மக்களுக்கு நல்லது, யாராலும் செய்ய முடியாது. குடும்ப சண்டையை கருணாநிதி அரசியலாக்கி, சென்டிமென்ட் வசனம் பேசி வருகிறார்.

கருணாநிதியின் பேச்சு மக்களிடம் இனி எடுபடாது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில், சிறை சென்றதற்கு வெட்கப்பட வேண்டியவர் கனிமொழி. சிறையிலிருந்து வந்ததும் ஏதோ விடுதலை போரில் பங்கேற்று வெற்றி பெற்று ஊர் திரும்பியவர் போல விழா நடத்தி கட்சியினர் பாராட்டியது தமிழக மக்களை சிரிப்பாய் சிரிக்க வைத்தது.

இந்நிலையில் ஊழலில் சிக்கியுள்ள ராசாவுக்கு நீலகிரி தொகுதியில், சீட் வழங்கி கருணாநிதி கவுரப்படுத்தி உள்ளார். தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி தமிழர்கள், கருணாநிதியின் கண்ணுக்கு தெரியவில்லை. தன் குடும்பமும், வேண்டப்பட்டவர்கள் மட்டுமே அவரின் கண்ணுக்கு தெரிந்தவர்களாக இருக்கின்றனர்.

தேர்தல் கருத்துக் கணிப்பில் திமுக 10 இடங்களில் வெற்றிபெறும் என குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்தேன். கணித்தவர்கள் திமுக மீது நிறைய நம்பிக்கையோடுதான் கணித்திருக்கிறார்கள். லோச்சபா தேர்தலில் திமுகவிற்கு, தமிழகத்தில் என்ன வரவேற்பு இருக்கிறது என்பதை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பார்த்தால்தான் தெரியும்.

பணத்தை வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என திமுக வேட்பாளர்கள் நினைக்கிறார்கள், ஏமாறுவது உறுதி.

ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்யும் இடங்களில் மக்களின் வரவேற்பை பார்த்து, திமுகவினர் மிரண்டு போயுள்ளனர். எப்படி ஜெயிக்கப்போகிறோம் என்ற பயம் அவர்களை தொற்றிக் கொண்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு பின் திமுகவினர், அதிமுகவுக்கு ஓடிவந்து அடைக்கலம் தேடுவது உறுதி என்று கூறியுள்ளார்.

0 Responses to அதிமுகவிடம் திமுக அடைக்கலம் தேடுவது உறுதி: வெண்ணிற ஆடை நிர்மலா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com