Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

க்ரைமீயா வாக்கெடுப்பின் ஆரம்ப முடிவுகள் தற்போதே வெளியாகி வருகின்றன. அதன்படி யுக்கிரேன் நாட்டின் ஒரு பகுதியான க்ரைமீயாவில் இன்று நடைபெற்ற கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் 93 விழுக்காடு க்ரைமீயா மக்கள் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இணைந்துகொள்ள விரும்பம் தெரிவித்துள்ளதாக ரஷ்சிய ஊடகத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இது ஒரு சட்டவிரோதமான வாக்கெடுப்பு என யுக்ரேனும் மேற்குலகமும் கூறிவருகின்றது. இதனையடுத்து நாளை திங்கட்கிழமை ரஷ்யாவுக்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடை குறித்து ஆராயப்படும் என செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

யுக்ரெய்ன் நாட்டிலிருந்து க்ரைமீயா பிராந்தியம் பிரிந்து சென்று ரஷ்யாவுடன் இணைவதற்கான கருத்தறியும் வாக்கெடுப்பு க்ரைமீயா தீபகற்பத்தில் நடந்துமுடிந்துள்ளது. 

க்ரைமீயாவின் கட்டுப்பாட்டை தற்போது கையெடுத்துள்ள ரஷ்ய ஆதரவு நிர்வாகத்தின் கீழ் க்ரைமீயா மேலதிகமான சுயாட்சி அதிகாரத்துடன் யுக்ரெய்னுக்குள்ளேயே நீடிக்க வேண்டுமா அல்லது ரஷ்யாவுடன் இணைய வேண்டுமா என வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

க்ரைமியா தீபகற்பத்தில் 20 இலட்சம் குடிமக்கள் வாழ்கின்றார்கள் இங்கு ரஷ்ய இன மக்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இந்த வாக்கெடுப்பு சட்ட விரோதமானது என யுக்ரெய்னும் அதன் மேற்குலக கூட்டாளி நாடுகளும் கூறுகின்றன.

வாக்குச்சாவடிகளின் முன்பு நெடிய வரிசைகளில் மக்கள் காத்திருந்து மக்கள்  வாக்களித்துள்ளனர். இது சோவியத் ஒன்றிய காலத்தை நினைவூட்டுவதாக தொிவிக்கப்படுகின்றது. க்ரைமீயாவில் ரஷ்ய துருப்பினரும் ரஷ்ய ஆதரவு தற்பாதுகாப்பு படையினரும் நிறைய அளவில் காணப்படுகின்றனர்.

0 Responses to ரஷ்யாவுடன் க்ரைமீயா இணைகிறது! 95 விழுக்காடு மக்கள் வாக்களித்தனர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com