கடந்த நான்கு தினங்களுக்கு முன்னதாக காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்திற்கு என்ன நடந்திருக்கலாம் என சி.என்.என் இணையத்தளம் இவ்வாறு அலசுகிறது.
அதாவது இவ்விமானம் நான்கு சந்தர்ப்பங்களில் மாயமாகியிருக்கலாம் என்கிறது இந்த ஆராய்ச்சி.
1. தீவிரவாத தாக்குதல், விமானத்தில் குண்டுவெடிப்பு அல்லது, 'Dry run' எனப்படும் வேண்டுமென்றே விபத்துக்கு உள்ளாக்கும் முயற்சி நடத்தப்பட்டிருக்கலாம்.
2. விமானம் நடுவானில் வைத்து மீண்டும் மலேசியாவுக்கு திரும்பி வர முனைந்ததாக ஒரு ஒரு ஊகம் எழுந்துள்ளது. இதனால் இவ்விமானம் கடத்தப்படுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.
3. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்.
4.விமானியின் தவறாக இருக்கலாம்.
இதோ இவ்வீடியோ பதிவு இந்நான்கு காரணங்களையும் விரிவாக விளக்குகிறது.
இதேவேளை இவ்விமான விபத்து உறுதி செய்யப்பட்டு, அதில் பயணித்த ஒருவர் கூட உயிருடன் மீட்கப்படாவிட்டால், 2001, செப்டெம்பர் 11 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு பிறகு இடம்பெற்ற மிக மோசமான விமான விபத்தாக இது பதியக் கூடும். அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் போது ஈடுபடுத்தப்பட்ட அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 260 பேரும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காணாமல் போன விமானமொன்றை தேடி அலைவது இது முதற்தடவையல்ல. இறுதியாக 2009ம் ஆண்டு ஜூன் மாதம், ஏர் பிரான்ஸ் 447 எனும் விமானம், பிரேசில் தலைநகர் ரியோ டி ஜனெரியோவிலிருந்து பாரிஸ் நோக்கி வந்து கொண்டிருந்த போது இடைநடுவே தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டு விபத்துக்கு உள்ளானது.
சுமார் இருவருட தேடுதலின் பின்னரே இவ்விமானத்தின் உதிர்ப் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பயணித்தவர்களின் இறந்த உடல்கள் அட்லாண்டிக் கடலின் ஆழத்தில் குவிந்து கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேவேளை கடந்த நான்கு தினங்களுக்கு முன்னதாக காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தவர்களின் செல்போன்களை தொடர்புகொள்வதற்கு முடிவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் மலேசியா ஏர்லைன்ஸ் விமான சேவைகள் அனைத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டு தொடர்ந்து மாற்றமின்றி இயங்கும் என மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 Responses to உண்மையில் விமானமொன்று திடீரென மாயமாகுமா? சில சாத்தியங்கள் (காணொளி, படங்கள்)