Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக இனப்படுகொலைக்கு நீதி கோரி வரலாறு காணாத ஆர்ப்பட்டப் பேரணி நேற்று இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 25வது கூட்டத்தொடரில் மனித உரிமை ஆணையகத்திற்கு, எமது மக்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்படும் படுகொலை தொடர்பாக தீர ஆராய்ந்து அனைத்துலக நீதிமன்றில் விசாரணை நடாத்தி எம் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க அனைத்துலக சமூகம் முன்வரவேண்டும் என வலியுறுத்தி,

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் முன்றலில் இருந்து கடந்த 29.01.2014 ஈகைப்பேரொளி முத்துக்குமார் நினைவு நாளில் ஆரம்பிக்கப்பட்ட நடை பயணம் மற்றும் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இருந்து 24.2.2014 ஆரம்பிக்கப்பட்ட "தமிழ் வான்" நீதிக்கான தமிழ்ச் சிற்றூர் தி பயணம் நேற்று ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் சபையின் முருகதாசனின் திடலில் பேரெழுச்சியுடன் நிறைவடைந்துள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டியும், அமெரிக்காவால் கொண்டுவரப்பட இருக்கும் வலுவற்ற, நீதி அற்ற தீர்மானத்தை, உள்ளக விசாரணையை, நிராகரித்தும் ஈழத்தமிழர்களுக்கு நடக்கும் இன அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையையும், தமிழீழத்துக்கான சர்வசன வாக்கெடுப்பை, கோரியும் நேற்று திங்களன்று புலம்பெயர் தமிழர்கள் மாபெரும் வரலாறு காணாத ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.

பிரான்ஸ், டென்மார்க், பிரிட்டன், நோர்வே, ஜேர்மனி, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாண்ட்,சுவீடன், போன்ற நாடுகளில் இருந்தும் சுவிஸில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்காண மக்கள் இந்தப் பேரணியில் இணைந்து கொண்டனர்.

சுவிஸ் நேரப்படி நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஜெனிவா பூங்காவனத்தில் இருந்து ஆரம்பமான இந்தப் மாபெரும் பேரணி ஐ.நா அலுவலகத்தில் முடிவடைந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,

“உலகே தமிழர்களின் நியாயமான உரிமையை அங்கீகரி”, “ தமிழ் இன அழிப்புக்கான அனைத்துலக சுயாதீன விசாரணையை நடத்து”, “எமக்கு வேண்டும் எமது நாடு”, “எமக்குத் தா எமது தேசத்தை, எமது தலைவர் பிரபாகரன்" ,"எமது தேசம் தமிழீழம் "போன்ற கோசங்களை கொட்டொலி முழங்க இதன்போது எழுப்பி எழுச்சிப் பேரணியில் சிங்கள அரசின் இன அழிப்புக்குறித்த நிழற்படங்கள் மற்றும் பாரிய அளவில் வாசகங்கள் அடங்கிய பாதாகைகள், தமீழிழத் தேசியக் கொடி, தமிழீழத் தேசியத் தலைவரின் படங்களை தாங்கிய வண்ணமும் கோசங்கள் எழுப்பியவாறு ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் ஐ.நா முன்றலை நோக்கி நகர்ந்து தமது போராட்டத்தை நடத்தியதுடன், எழுச்சிப் பிரகடனத்தையும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து எழுப்பினர்.

பொதுசுடர் ஏற்றப்பட்டு பின்னர் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.அதன் பின்னர் ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகம் முன்றிலில் தன்னை ஈகம் செய்த ஈகைப் பேரொளிகள் முருகதாசன் மற்றும் செந்தில்குமரன் உட்பட அனைத்து ஈகைப் பேரொளிகளின் திருவுருவ படத்துக்கு மலர்மாலை சூட்டி அஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கம் செய்யப்பட்டது.

அதன்பின்னர் பேரணி ஒருங்கிணைப்புக் குழுவினர் சார்பில் முன்னாள் ஐநா உதவி பொதுச் செயலாளர் உட்பட தமிழர் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அலுவலகத்துக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதோடு, ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினையும் கையளித்தனர்.

பேரணியில் முக்கிய சிறப்பு பேச்சாளராக முன்னாள் ஐநா சபை உதவிப் பொதுச்செயலாளர் Dr Denis Halliday கலந்துகொண்டு, தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு இன்றும் இன அழிப்பு நடக்கின்றது என்றும் தமிழர்களுடைய தேசம் தமிழீழம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

அத்தோடு நோர்வே நாட்டில் இருந்து வருகை தந்த நகர முதல்வர் Anders Riise உட்பட தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஏனைய வேற்றின அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.

தேசியக்கொடி இறக்கத்தோடு நம்புங்கள் தமிழீழம் முழக்கத்தோடு பேரணி நிறைவுபெற்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு




















0 Responses to ஜெனிவா ஐ.நா.சபை முன்றலில் வரலாறு காணாத தமிழர்களின் பேரெழுச்சி! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com