Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் | 12.03.2014

பதிந்தவர்: ஈழப்பிரியா 12 March 2014

மேஷம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். வாகன யோகம் கிட்டும். தொழில் முன்னேற்றம் உண்டு.

ரிஷபம்
வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும் நாள். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம். குடும்ப பொறுப்புகள் கூடும். வியாபார விருத்திக்கு வித்திடுவீர்கள். பயணத்தால் பலன் உண்டு.

மிதுனம்
வளர்ச்சி அதிகரிக்கும் நாள். பிரியமான சிலரைத் தேடிச்சென்று சந்திப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சி, சந்தோஷம் அதிகரிக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம்
காரிய வெற்றிக்கு கந்தனை வழிபட வேண்டிய நாள். கடமையில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுவீர்கள். வரவிற்கேற்ற செலவுகள் ஏற்படலாம். திடீர் பயணமொன்று தித்திக்க வைக்கும்.

சிம்மம்
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். வியாபாரத்தில் ஆக்க பூர்வமான மாற்றங்களைச் செய்ய முன்வருவீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

கன்னி
பணவரவு திருப்தியாக இருக்கும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தொலைதூர பயணங்களில் நாட்டம் செல்லும். பொருளாதார நிலை உயரும்.

துலாம்
ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொகை எதிர்பார்த்த படியே வந்து சேரும். சுற்றத்தாரின் வருகை உண்டு. வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும்.

விருச்சகம்
செல்வநிலை உயரும் நாள். வி.ஐ.பிக்களின் சந்திப்பு கிட்டும். விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். பணத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும்.

தனுசு
ஆலய வழிபாட்டால் அமைதி காண வேண்டிய நாள். பிறருக்காக பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது. பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. கடைசிநேரத்தில் காரியம் முடியும்.

மகரம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வரன்கள் வந்து வாயிற்கதவைத் தட்டும். உற்றார், உறவினர்களின் சந்திப்பு கிட்டும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

மீனம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பேச்சில் கனிவு பிறக்கும். பிள்ளைகளின் ஆசைகளைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். இடம், பூமி வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். வரவு திருப்தி தரும்.

0 Responses to இன்றைய ராசி பலன் | 12.03.2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com