Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவுக்கான இந்திய தூதரக அலுவலக அதிகாரிகளில் ஒருவரான தேவயானி கோப்ரகடே மீது அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 போலி விசா மோசடி மற்றும் வீட்டுப் பணிப்பெண்ணுக்கு மிக குறைவான ஊதியம் வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் தேவயானி கோப்ரகடே மீது முன்னர் குற்றம் சுமத்தியிருந்த அமெரிக்க காவல்துறையையும், அவரை அவமானப்படுத்திக் கைது செய்த நடவடிக்கையையும் கண்டித்து இந்திய மத்திய அரசு கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தது.

இதனால் அமெரிக்க - இந்தியா இடையே இராஜதந்திர உறவு பாதித்திருந்தது. இதையடுத்து தேவயானி மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து அவரை விடுவித்திருந்தது நீதிமன்றம். தேவயானிக்கு வழங்கப்பட வேண்டிய இராஜதந்திர பாதுகாப்பின் கீழ் அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தண்டிக்க முடியாது என கடந்த இரு நாட்களுக்கு முன்னர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

 எனினும் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் மீண்டும் புதிய குற்றச்சாட்டு தற்போது சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் தேவயானி இந்தியாவுக்கு மீண்டும் திரும்பியிருந்தார்.

4tamilmedia

0 Responses to தேவயானி கோப்ரகடே மீது மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது அமெரிக்கா!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com