கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் அமெரிக்க போர்க்கப்பல்களும் களமிறங்கியுள்ளன.
எனினும் சற்று வித்தியாசமாக வழமையாக ஏனைய மீட்பு விமானங்கள், கப்பல்கள் தேடும் கடற்பரப்பிலிருந்து விலகி, இந்து சமுத்திரக் கடற்பரப்பில் தமது தேடுதலை தொடங்கியுள்ளன.
தமக்கு கிடைத்த புதிய தகவல்களைக் கொண்டு இந்து சமுத்திரத்தில் தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. விமானம் காணாமல் போனதாக நம்பப்படும் நேரத்திலிருந்து ஐந்து மணி நேரத்திற்கு பின்னர் விமானத்தின் செய்மதி தொடர்புகள் சேட்டலைட் ஒன்றுக்கு கிடைத்திருப்பதாகவும் இதனால், ஐந்து மணிநேர தூரத்திற்கு சென்ற பின்னரே விமானம் காணாமல் போயிருப்பதாகவும் புதிதாக வெளிவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே விமானத்தின் உதிரிப் பாகங்களை ஒத்த பகுதிகளை சீனா, நியூசிலாந்து கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டதாக முன்னர் தகவல் வெளிவந்த போதும் பின்னர் அத்தகவல் மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 239 பயணிகளுடன் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தொடர்பில் இன்னமும் மர்மம் நீடித்தவாறே உள்ளது.
4tamilmedia
0 Responses to மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடி இந்து சமுத்திரத்தில் களமிறங்கிய அமெரிக்க போர்க் கப்பல்கள்