கடந்து சென்ற வாரமானது தமிழ்த் தேசிய அரசியல் உலகில் ஏமாற்றமும், விரக்தியும், குழப்பமும் மிகுந்த வாரமாகவே முடிந்துள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா, அமெரிக்கா, மொன்ரநெக்ரோ, மசடோனியா, மொறீசியஸ் ஆகிய நாடுகளால் கடந்த 3ஆம் நாளன்று வெளியிடப்பட்ட உத்தேச தீர்மானத்தை மையப்படுத்தியே இந்த ஏமாற்றமும், விரக்தியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சவையும், அவரது பரிவாரங்களையும் முன்னிறுத்தும் வகையிலும், சிங்களம் மீது பொருண்மியத் தடைகளை விதிக்கும் விதத்திலும் ஜெனீவா தீர்மானம் அமையும் என்று நம்பியிருந்தவர்களுக்கு உத்தேச தீர்மானத்தின் நகல் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.
இதேபோன்று ஜெனீவாவில் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் எவ்விதமான தீர்மானங்களையும் மேற்குலகம் கொண்டுவரப் போவதில்லை என்று விமர்சித்தவர்களுடன் முரண்டுபிடித்தவர்களுக்கு உத்தேச தீர்மானத்தின் நகலால் இப்பொழுது விரக்தியே மிஞ்சியுள்ளது. இவை போதாதென்று மேற்குலக நாடுகளின் உத்தேசத் தீர்மானம் வெளிவந்த நாளன்றும், அதனை அடுத்த நாட்களிலும் பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தி மேற்குலக நாடுகளின் மூத்த இராசதந்திரிகளும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரும் விடுத்த பகிரங்க அழைப்புக்கள் மக்களிடையே குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளன.
மேற்குலக நாடுகளின் உத்தேச தீர்மான நகல் வெளிவருவதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய பிரித்தானிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கூகோ சுவையர், இலங்கையின் விடயத்தில் அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுப்பதற்கான காலம் வந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். மறுநாள் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக், இலங்கை மீதான அனைத்துலக விசாரணைகள் நம்பகமான முறையிலும், சுயாதீனமான விதத்திலும் நடைபெறுவதற்குத் தேவையான முழு முயற்சிகளையும் தமது அரசாங்கம் எடுத்து வருவதாக அறிவித்தார். இதனை அடுத்த நாளன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய நவநீதம்பிள்ளை அம்மையார், அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உருவாக்குவதற்கான காலம் வந்துவிட்டதாக அறிவித்தார்.
இவற்றால் கடந்த வாரத்தில் ஏற்பட்ட ஏமாற்றமும், விரக்தியும், குழப்பமும் தமிழ் மக்களிடையே சங்கிலித் தொடராகப் பல்வேறு கேள்விகளையும் உருவகிக்கத் தவறவில்லை. ஜெனீவாவில் இப்பொழுது என்னதான் நடக்கின்றது? இறுதிப் போரில் சிங்களம் மேற்கொண்ட தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கும், அவற்றின் அங்கமாக அது இழைத்த போர்க்குற்றங்கள் - மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களுக்கும் பொறுப்புக்கூறும் வகையிலான பன்னாட்டு சுயாதீன விசாரணை நடைபெறுமா? அல்லது இறுதிப் போரில் வன்னி மக்களைக் கைவிட்டது போன்று இம்முறையும் எம்மை மேற்குலகம் கைவிட்டு விடுமா? இவைதான் இன்று தமிழ் மக்களிடையே தொக்கிநிற்கும் முக்கியமான கேள்விகள்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் வைத்து பன்னாட்டு விசாரணை தொடர்பான அறிவித்தலை பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் வெளியிட்ட பொழுதே சிங்களத்தை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் எண்ணமோ, அன்றி சிங்களத்தின் மீது பொருண்மியத் தடைகளைக் கொண்டு வரும் நோக்கமோ மேற்குலகிற்குக் கிடையாது என்பதை இப்பத்தியூடாக நாம் தெளிவாகக் கூறியிருந்தோம். மாறாக ‘இன்ரர்நசனல் கொமிசன் ஒவ் இன்குயரி’என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பன்னாட்டு விசாரணை ஆணையம் ஒன்றை உருவாக்கும் நடவடிக்கைகளையே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மேற்குலகம் மேற்கொள்ளும் என்றும் ‘காலத்தை விரைவுபடுத்த வேண்டிய காலம்’ என்ற மகுடத்தின் கீழ் கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் எழுதப்பட்ட பத்தியில் நாம் எதிர்வுகூறியிருந்தோம்.
அப்பத்தியில் கட்டியம் கூறப்பட்டதை உறுதி செய்யும் வகையிலான சமிக்ஞைகள் கடந்த இரண்டு மாதங்களில் மேற்குலக இராசதந்திரிகளால் வெளியிடப்பட்டன. இது பற்றி ஜெனீவா அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அனைத்துலக நெருக்கடிக் குழு என்ற பன்னாட்டுக் கல்விமான்கள் குழாம், இறுதிப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் - மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளைப் பன்னாட்டு விசாரணை ஆணையம் ஊடாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.
இவ்வாறான பின்புலத்திலேயே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச தீர்மானத்தின் நகலைக் கடந்த வாரம் மேற்குலக நாடுகள் கசிய விட்டிருந்தன. பத்து சரத்துக்களைக் கொண்ட இவ் உத்தேசத் தீர்மானத்தில் புதிதாக இரண்டு சரத்துக்கள் மட்டுமே காணப்படுகின்றன. இதில் ஒரு சரத்து வடக்கு மாகாண சபையும், அதன் முதலமைச்சரும் தமது பணிகளை சிறீலங்கா அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திற்கு இசைவாக மேற்கொள்வதற்கு தேவையான வளங்களை வழங்குமாறு சிங்களத்தை வலியுறுத்துகின்றது. மற்றைய சரத்து பன்னாட்டு சுயாதீன விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் கோரிக்கைகளை வரவேற்பதோடு, இறுதிப் போரில் நிகழ்ந்தேறியதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகத்தை வலியுறுத்துகின்றது. இவை தவிர்ந்த ஏனைய அனைத்துச் சரத்துக்களும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் காணப்பட்ட சரத்துக்களின் மறுஅவதாரங்களாகவே உள்ளன.
இவற்றில் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் தொடர்பான சரத்து இந்தியாவின் ஆலோசனைக்கு அமைவாகவும், இந்தியாவின் ஆதரவைப் பெறும் நோக்கத்துடனுமே உத்தேச தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் வார இதழ் தகவல் வெளியிட்டுள்ளது. இத் தகவலை இதுவரை புதுடில்லி உறுதிசெய்யாத பொழுதும், தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் கூர்முனையை மழுங்கடிக்கும் நோக்கத்துடன் 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை சிங்களத்தின் மீது திணித்த இந்தியா, உத்தேச தீர்மானத்தில் இவ்வாறான சரத்தை உள்ளடக்கியிருப்பதையிட்டு நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை.
அடுத்தது இலங்கை மீதான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரை வலியுறுத்தும் சரத்து. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் வகையில் அமையும் என்று எதிர்பார்த்திருந்த அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்திய சரத்தாகவே இது அமைந்துள்ளது. அதிலும் பன்னாட்டு விசாரணை ஆணையம் ஒன்றை உருவாக்குவது பற்றிய சொல்லாடல்களை முற்றுமுழுதாகத் தவிர்த்து, வெறுமனே இலங்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகத்தை வலியுறுத்தும் சொல்லாடல்களை மட்டுமே இச்சரத்து தன்னகத்தே கொண்டுள்ளது.
தவிர இவ் உத்தேசத் தீர்மானத்தின் ஏனைய சரத்துக்கள் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் வலியுறுத்தப்பட்டது போன்று இம்முறையும் உள்ளக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிறீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தும் சொல்லாடல்களைக் கொண்டுள்ளன. இவற்றையிட்டுத் தமது பிரதிபலிப்புக்களை வெளியிட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், உலகத் தமிழர் பேரவை போன்ற சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், இலங்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான பன்னாட்டு விசாரணை ஆணையத்தை உருவாக்கும் முன்மொழிவு உத்தேச தீர்மானத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. இதனையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரால் கையப்பமிடப்பட்ட அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
ஒரு வகையில் இவை அபத்தம் மிகுந்த நகைப்புக்கிடமான அறிக்கைகளே. இதற்குப் பன்னாட்டு விசாரணை ஆணையம் பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும், உலகத் தமிழர் பேரவை போன்ற சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தலைமைகளும் கொண்டுள்ள தவறான புரிதல்களே காரணமாகும். தமிழ்த் தேசிய அரசியலில் பழுத்த அரசியல்வாதியாகவும், மூத்த சட்டத்தரணியாகவும் தன்னை முன்னிலைப்படுத்துபவர் இரா.சம்பந்தர். இதேபோன்று சிறீலங்கா உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசராகப் பதவி வகித்தவர் என்ற வகையில் சட்ட நுணுக்கங்களில் கரைகண்டவர் போன்று தன்னைக் காண்பிப்பவர் சி.வி.விக்னேஸ்வரன். அண்மையில் வடக்கு மாகாண சபையில் தமிழினப் படுகொலை தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்ட பொழுது அத் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த ‘இனவழிப்பு’ என்ற முக்கிய சொற்பதத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக ‘இனவழிப்பிற்கு ஒப்பான நடவடிக்கை’ என்ற சொல்லாடலை உள்ளடக்குமாறு அடம்பிடித்தவர் விக்னேஸ்வரன். போதாக்குறைக்குத் தனது பிடிவாதத்தை நியாயப்படுத்துவதற்கு சட்ட நுணுக்கங்களை துணைக்கு அழைத்தவர் விக்னேஸ்வரன். அப்படிப்பட்ட விக்னேஸ்வரன், மேற்குலகின் உத்தேச தீர்மானத்தில் பன்னாட்டு விசாரணை ஆணையம் ஒன்றை உருவாக்குவதற்கான முன்மொழிவு உள்ளடக்கப்படவில்லை என்று கையப்பமிட்டு அறிக்கை வெளியிட்டிருப்பது நகைப்புக்கிடமானதே.
மனித உரிமைகளைப் பேணும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட ஒரு பட்டய அமைப்பாக விளங்கும் மனித உரிமைகள் பேரவை, ஒரு நாட்டில் மனித உரிமை மீறல்கள் நிகழும் பொழுது அவை தொடர்பான விசாரணைகளை ஐந்து வழிகளில் மேற்கொள்ள முடியும். பன்னாட்டு விசாரணை ஆணையம் ஒன்றை உருவாக்குவது அவற்றில் முதலாவது வழிமுறையாகும். இது தவிர சிறப்பு விசாரணையாளர் ஒருவரையோ அல்லது சிறப்புப் பிரதிநிதி ஒருவரையோ நியமிப்பதன் ஊடாகவும், சுயாதீன நிபுணர்கள் குழு அல்லது செயற்குழுக்களை உருவாக்குவதன் மூலமாகவும் இவ்வாறான விசாரணைகளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள முடியும்.
இவற்றில் ஓரளவு வீரியம் மிக்க விசாரணைப் பொறிமுறையாக விளங்குவது பன்னாட்டு விசாரணை ஆணையப் பொறிமுறையே ஆகும். இவ் விசாரணை ஆணையத்தை இரண்டு வழிகளில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உருவாக்க முடியும். ஒன்று வடகொரியா, சிரியா ஆகிய நாடுகளின் விடயத்தில் நியமிக்கப்பட்டது போன்று அங்கத்துவ நாடுகளின் பங்கேற்பைக் கொண்ட விசாரணை ஆணையத்தை உருவாக்குதல். மற்றையது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகத்தின் தலைமைத்துவத்தைக் கொண்ட விசாரணை ஆணையத்தை உருவாக்குதல். இந்த இரண்டாவது வகையிலான விசாரணை ஆணையம் கடந்த காலங்களில் கிழக்குத் தீமோர், மேற்கு சகாரா, சூடான், லைபீரியா, லெபனான், பெய்ற் கனூன் (பலஸ்தீனம்), கெனியா, ரொகோ, கினி, காசா (பலஸ்தீனம்) ஆகிய இடங்களில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு உருவாக்கப்பட்டிருந்தன.
சாராம்சத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகமும் இரு வெவ்வேறு கட்டமைப்புக்களாக இயங்கினாலும், மனித உரிமைகளை நிலைநாட்டும் விடயத்தில் இரு கட்டமைப்புக்களும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தே செயற்பட்டு வருகின்றன. அதிலும் மனித உரிமைகள் பேரவைக்கு தேவையான செயலக (நிர்வாக) உதவிப் பணிகளை மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகமே வழங்கி வருகின்றது. இவ்வாறு மனித உரிமைகள் பேரவையின் செயலகமாக இயங்கும் மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகத்தின் தலைமைத்துவத்தின் கீழேயே பல்வேறு பன்னாட்டு விசாரணை ஆணையங்களை மனித உரிமைகள் பேரவை உருவாக்கிச் செயற்படுத்தியுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இவ் விசாரணை ஆணையங்கள் இயங்காது விட்டாலும், நடைமுறையில் மனித உரிமைகள் ஆணையத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் விசாரணை ஆணையங்களுக்கு ஒப்பான அதிகாரங்களையே இவ் விசாரணை ஆணையங்களும் கொண்டிருக்கும். தவிர இவற்றால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் பெறுபேறுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இன்னொரு விதத்தில் கூறுவதானால் மனித உரிமைகள் பேரவையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் விசாரணை ஆணையத்திற்கும், மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகத்தின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் விசாரணை ஆணையத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு என்பது மோதகத்திற்கும், கொழுக்கட்டைக்கும் இடையே உள்ள வேறுபாடுதான். அதாவது சாராம்சத்தில் இரண்டும் ஒரே அமைப்புக்கள்தான்.
எனவே மேற்குலகின் உத்தேச தீர்மானத்தை நாம் நுணுகி ஆராய்ந்தால் ஐயம் திரிபு இன்றி ஒரு விடயம் புலப்படும். அதாவது இறுதிப் போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் - மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் போன்றவற்றை விசாரணை செய்வதற்கான பன்னாட்டு விசாரணை ஆணையம் ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் தலைமையில் உருவாக்குவதே மேற்குலகின் குறிக்கோளாக உள்ளது.
சரி. இதனால் தமிழ் மக்களுக்கு ஏதாவது பயன் ஏற்படுமா? முதலாவது ஈழத்தில் நடைபெற்றது இனவழிப்பு என்பதை இப்போதைக்கு இவ் உத்தேச விசாரணை ஆணையம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதை நாம் உறுதியாகக் கூறலாம். தமிழ் மக்கள் மீது சிங்களம் இழைத்தது இனவழிப்பு என்பதை இவ் உத்தேச விசாரணை ஆணையம் ஏற்றுக் கொள்வது என்பது எதிர்காலத்தில் நாம் மேற்கொள்ளப் போகும் மதிநுட்பமான நகர்வுகளிலேயே தங்கியுள்ளது. இரண்டாவது தமிழீழ விடுதலைப் புலிகள் மீது போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொண்டு எமது தேச சுதந்திர இயக்கத்திற்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சிகளையும் இவ் உத்தேச விசாரணை ஆணையம் மேற்கொள்ளும் என்று நாம் உறுதியாகக் கூறலாம். இதனை முறியடிப்பதும்கூட எமது மதிநுட்பமான நகர்வுகளிலேயே தங்கியிருக்கப் போகின்றது. மூன்றாவது சிங்களத்தை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் உடனடியாக இவ் உத்தேச விசாரணை ஆணையம் முன்னிறுத்தப் போவதில்லை. அவ்வாறான சூழல் ஏற்படுவதற்கு அல்லது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஒப்பான நடுவர் மன்றம் ஒன்று உருவாக்கப்படுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் எடுக்கலாம். நான்காவது தமிழீழ தாயகத்தில் மாற்றுவழிகளில் இன்று சிங்களம் முன்னெடுத்து வரும் இனவழிப்பு நடவடிக்கைகளையோ, சிங்களக் குடியேற்றங்களையோ இவ் உத்தேச விசாரணை ஆணையம் தடுத்து நிறுத்தப் போவதில்லை.
அப்படியென்றால் இவ் உத்தேச விசாரணை ஆணையத்தால் தமிழ் மக்களுக்கு எவ்விதமான பயனும் ஏற்படப் போவதில்லையா? தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை இவ் உத்தேச ஆணையம் பூர்த்தி செய்யப் போவதில்லை என்பது ஏனோ உண்மைதான். ஆனால் இதனால் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என்று நாம் கூறிவிட முடியாது. இவ் ஆணையத்தின் உருவாக்கத்தால் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
முதலாவது இவ் விசாரணை ஆணையம் உருவாக்கப்படுவதைத் தொடர்ந்து அதன் செயற்பாடுகளுக்கு சிங்களம் முட்டுக்கட்டை போடும் பொழுது, அதன் விளைவாக உலக அரங்கில் சிங்கள ஆட்சியாளர்கள் தனிமைப்படுத்தப்படும் சூழல் உருவாகும். இரண்டாவது இவ் விசாரணை ஆணையத்தை மதிநுட்பமான முறையில் கையாள்வதன் ஊடாக எமது தேச சுதந்திர இயக்கம் மீதான களங்கத்தை நாம் துடைக்க முடியும். மூன்றாவது இவ் விசாரணை ஆணையத்திற்கு நாம் மேற்கொள்ளும் முறைப்பாடுகள் ஊடாக ஈழத்தில் சிங்களம் இழைத்தது வெறும் போர்க்குற்றச்செயல்களும், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களும் மட்டுமன்றி திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைகள் என்பதை உலக அரங்கில் நிரூபிக்க முடியும். நான்காவது இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் இனவழிப்பிற்கான பரிகாரமாகத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான நியாயத்தை உலக அரங்கில் நாம் வலுப்படுத்த முடியும்.
அதாவது இவ் உத்தேச விசாரணை ஆணையம் உருவாக்கப்படுவதால் தமிழ் மக்களுக்கு உடனடியாக எவ்விதமான நன்மைகளும் ஏற்படப் போவதில்லை என்றாலும், இதனை நாம் சரியான முறையிலும், மதிநுட்பத்துடனும் கையாண்டால் நீண்ட கால நோக்கில் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான உலக அங்கீகாரத்தைப் பெறுவதற்கான புறச்சூழலை நிச்சயம் தோற்றுவிக்க முடியும்.
ஆனால் அனைத்துலக அங்கீகாரம் மட்டும் தமிழீழத் தனியரசு நிறுவப்படும் சூழலுக்கு வழிகோலும் என்று நாம் நம்பியிருக்க முடியாது. அவ்வாறு நாம் நம்பியிருக்கும் பட்சத்தில் பலஸ்தீனர்களின் கதியே எமக்கும் ஏற்படும். தனியரசை நிறுவுவதற்கான உலக அங்கீகாரம் இன்று பலஸ்தீனர்களுக்கு இருக்கின்ற பொழுதும், இஸ்ரேலிடமிருந்து தமது மண்ணை மீட்பதற்கான வலிமை இல்லாத காரணத்தால் தனியரசை நிறுவ முடியாத கையறு நிலையிலேயே பலஸ்தீன மக்கள் உள்ளார்கள்.
எனவே ஜெனீவாவில் மேற்குலகம் நிறைவேற்றும் தீர்மானங்களை மட்டும் மையப்படுத்தி எமது போராட்ட வியூகங்கள் தொடர்ந்தும் வகுக்கப்படும் பட்சத்தில் பலஸ்தீனர்களைப் போன்று தனியரசுக்கான உலக அங்கீகாரத்தை மட்டுமே நீண்ட காலத்திற்கு பின்னர் எம்மால் பெற முடியுமே தவிர எமது தாயக பூமியை எதிரியின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க முடியாது. மாறாக தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் எமது போராட்ட வியூகங்கள் அமைந்தால் மட்டுமே எமது தாயக பூமியை நாம் விடுவிக்க முடியும்.
நன்றி: ஈழமுரசு

0 Responses to தலைவரின் சிந்தனையும், மேற்குலகின் வியூகங்களும் - சேரமான்