தனது இராஜதந்திர நகர்வுகள் மூலம், இலங்கையில்
இரட்டை அதிகார மையங்களை உருவாக்க இந்தியா முயற்சிப்பதாக, அண்மையில்
ஜாதிக ஹெல உறுமய குற்றம் சாட்டியிருந்தது நினைவிருக்கலாம்.
இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த இரட்டை
அதிகார மையப் போக்கு புதிதாகத் தோன்றிய ஒன்றல்ல. ஆனால், ஜாதிக ஹெல
உறுமயவுக்கு இது புதிதாகத் தெரியத் தொடங்கியுள்ளதற்குக் காரணம்,
வடக்கு மாகாண சபையின் உருவாக்கம் தான்.
அண்மையில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைச், சந்தித்துப் பேசியது தான், ஹெல உறுமயவின் இந்த சீற்றத்துக்குக் காரணம்.
வடக்கு மாகாண சபையை, தனியானதொரு நிர்வாக மையமாக, அதிகார மையமாக ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்களத் தேசியவாத அமைப்புக்கள் பார்க்கின்றன. இந்த இரட்டை அதிகார மையத்தை இந்தியாவே உருவாக்க முனைவதாக, குற்றம் சாட்டியிருப்பது தான் வேடிக்கையான விடயம்.
ஏனென்றால், இலங்கையில் இரட்டை அதிகார மையத்தை உருவாக்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டது என்பது பழைய காலக் கதை. இப்போது, இந்தியாவை விடவும், இந்த இரட்டை அதிகார மைய உருவாக்கத்தில் கூடிய பங்கு வகிப்பது, சிங்களத் தேசியவாத சக்திகள் தான் என்பதே முக்கியமானது.
2009 மே மாதம், விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததுடன், நாட்டை ஒன்றுபடுத்தி விட்டதாக, சிங்களத் தேசியவாதிகள் போட்ட கணக்கும், அதற்குப் பின்னர், விட்ட தவறுகளும் தான், இரட்டை அதிகார மையப் போக்கு தீவிரமடையக் காரணம்.
எப்போது, வடக்கில் ஆயுதப் போராட்டம் தீவிரம் பெற்றதோ, அப்போதே இலங்கையில் இரட்டை நிர்வாக மையச் சூழலும் உருவாகி விட்டது. திம்புப் பேச்சுக்களின் போது இந்த இரட்டை அதிகார மையப் போக்கு ஓரளவுக்கு வெளிச்சமானது.
பின்னர், ஒரு கட்டத்தில், வடக்கில் பல பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தமிழ்ப் போராளிக் குழுக்கள், தனியரசுக் கட்டுமான முயற்சிகளிலும் ஈடுபட்டன. அப்போது இந்தப் போக்கு மேலும் தீவிரமானது.
1990 ற்குப் பின்னர், இலங்கையில் இரட்டை அதிகார மையப் போக்கு மேலும் வலுப்பெறுவதற்கு, புலிகள் வடக்கின் மீது கொண்டிருந்த ஆதிக்கமே பிரதான காரணம். அதை வைத்து அவர்கள் ஒரு நிழல் அரசையே நடத்தினர்.
இதன் உச்சக்கட்டமாக, 2002ல், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்பாடு, சர்வதேச அளவில் இரட்டை அதிகார அமைப்பை அங்கீகரிக்கும் வகையில் அமைந்தது. இதன் காரணமாக, அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை உலகின் ஒரு பகுதி நாடுகள் புலிகளுக்கும் கொடுக்கத் தவறவில்லை.
இவையெல்லாம், சிங்களத் தேசியவாதிகளால் பொறுத்துக் கொள்ள முடியாத, அவர்களால் ஜீரணிக்க முடியாத விடயங்களாக இருந்தன. அதனால் தான், ரணில்-பிரபாகரன் உடன்பாட்டை கிழித்தெறிவதற்காக தீவிர போராட்டங்களை நடத்தி அதில் வெற்றியும் கண்டனர்.
விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர், இந்த இரட்டை அதிகார மையப் போக்கும், மறைந்து விடும் என்றே சிங்களத் தேசிய வாதிகள் கணக்குப் போட்டனர். ஆனால், விடுதலைப் புலிகள் விட்ட இடத்தில் இருந்து, இரட்டை அதிகார மைய இடைவெளியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிரப்பியதும், அவர்களுக்கு கூடுதல் அதிர்ச்சியாகி விட்டது.
ஏனென்றால், ஒற்றையாட்சியை உறுதிப்படுத்தி விட்டதாக, கொண்டாடிக் கொண்டிருந்த அவர்களுக்கு, தமிழர்களின் பிரச்சினையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலம் அறிந்து கொள்ள முனைந்ததை, ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, ஓரளவுக்கு உலகம் ஏற்றுக் கொண்ட போது, மீண்டும் இரட்டை அதிகார மையச் செயல் நிலை தீவிரமாகியது. அமெரிக்காவும், இந்தியாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நெருக்கமான தொடர்பை வைத்திருப்பதும், அவ்வப்போது, வாஷிங்டனும், புதுடில்லியும் அவர்களுக்கு அழைப்பு விடுப்பதும், இதன் உச்சக்கட்டங்கள்.
அதுமட்டுமல்ல, கொழும்புக்கு வரும் அமெரிக்க, இந்தியப் பிரதிநிதிகள், அரசாங்கத்துடனான கலந்துரையாடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கொடுப்பது முக்கியமானது. இப்போது, வடக்கு மாகாண சபையின் உருவாக்கத்தை அடுத்து, இந்த இரட்டை அதிகார மையப் போக்கு மேலும், வலுப்பெறப் போவது உண்மையே.
ஏனென்றால், வடக்கிலுள்ள மக்களின் சார்பில் பேசவல்ல ஒரு அரசாக, வடக்கு மாகாண சபை உள்ளதால், நிச்சயம் வெளிநாடுகள், அதனுடன் தொடர்புகளையும், உறவுகளையும் வலுப்படுத்தவே முனையும். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதல்வருடன் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர், சல்மான் குர்ஷித், அவரைப் புதுடில்லிக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா மட்டுமன்றி, ஏனைய நாடுகளும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. அதிலும், வடக்கிலுள்ள மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள சூழலில், இத்தகைய உறவுகள் இன்னும் அதிகரிக்குமே தவிர குறையாது. இந்த நிலைக்கு இந்தியா காரணம் என்ற குற்றச்சாட்டு வேடிக்கையான விடயம்.
ஏனென்றால், போர் முடிவுக்கு வந்த பின்னர், கடந்த நான்கு ஆண்டுகளில், இனப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு ஒன்று எட்டப்பட்டிருந்தால், தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து வெளிநாடுகள் பேச வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. வடக்கு மாகாண சபையுடன் தொடர்புகளைப் பேண வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது.
வடக்கு மாகாண சபை தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்டதொரு அரசாக மாற்றம் பெற்றுள்ள நிலையில், இந்த இரட்டை அதிகாரப் போக்கு தவிர்க்க முடியாத ஒன்று. ஏனென்றால், பிரச்சினையின் மையமாக வடக்கு இருக்கும் போது, அதனை ஒதுக்கி வைத்து விட்டு இந்தியாவினாலோ ஏனைய நாடுகளினாலோ எதையும் செய்ய முடியாது.
அதிலும் குறிப்பாக, வடக்கு மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியதும், அவர்கள் தனிநாட்டைப் பிரகடனம் செய்யப் போவதான, மாயையை உருவாக்கியதும் கூட, வெளிநாடுகள் இரட்டை அதிகார மையத்துக்கு ஆதரவளிப்பதற்கு இன்னொரு காரணம்.
ஏனென்றால், இலங்கைத் தீவு இரண்டாக உடைபடுவதை, பல நாடுகள் ஏற்கத் தயாராக இல்லை. இத்தகைய சூழலில், வடக்குடன் நெருக்கத்தைப் பேணவே வெளிநாடுகள் முனையும். இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண்பதில் எந்தளவுக்கு இழுபறி ஏற்படுகிறதோ, அந்தளவுக்கு, இரட்டை அதிகார மையப் போக்கும் வலுப்பெறும்.
இந்த உண்மையை உணராமல், ஜாதிக ஹெல உறுமய, இந்தியாவைச் சாட முனைந்துள்ளது வியப்பானதே.
ஹரிகரன்

0 Responses to இலங்கையில் வலுப்பெறும் இரட்டை அதிகார மையம் - ஹரிகரன்