‘மஹிந்த சிந்தனை உலகை வெல்லும் வழி’ எனும் தலைப்பில் ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது விஞ்ஞாபனத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையைத் தோற்கடிப்பதற்கு சர்வதேச நாடுகள் இணைந்து சதி செய்வதாகவும், ஆனாலும் அதற்கு என்றைக்குமே இடமளிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, “தன் மீது குடும்ப அரசியலை முன்னெடுக்கின்றேன் என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், நான் நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் என்னுடைய குடும்பமாகவே கருதுகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரும், முன்னாள் பிரதமருமான ரட்ணசிறி விக்ரமநாயக்க கலந்து கொண்டிருக்கவில்லை. இதனிடையே, அவர், விரைவில் பொது எதிரணிப் பக்கம் செல்வார் என்று கூறப்படுகின்றது.

0 Responses to ‘மஹிந்த சிந்தனை உலகை வெல்லும் வழி’; மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!