Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு கிழக்கிலுள்ள எமது மக்கள் புலம் பெயர்வதை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எமது இளைஞர்கள் பாதுகாப்பு அச்சுறுல்களினாலேயே அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக, தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது. அத்தோடு, அவர்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலான நிலைமைகளே இருக்கின்றது. அதனாலேயே, அவர்கள் ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு செல்வதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார திணைக்களத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஜோன் பொனர் மற்றும் அவுஸ்திரேலிய தூதுவராலயத்தின் அரசியற்பிரிவு துணைச் செயலர் எட்வின சின்கிளேயர் உள்ளிட்ட குழுவினருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ள வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா ஆகியோருக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன்போதே, வடக்கு மாகாண அமைச்சர்கள் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

மோதல்கள் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், எமது பகுதிகளில் இராணுவத்தின் ஆதிக்கமே இருக்கின்றது. இராணுவம் தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றது. இதனால், மக்களுக்கு தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனாலும், அவுஸ்திரேலியா நோக்கி மக்கள் செல்கின்றனர் என்று வடக்கு மாகாண அமைச்சர்கள் அந்தச் சந்திப்பின் போது மேலும் தெரிவித்துள்ளனர்.

0 Responses to எமது இளைஞர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களினாலேயே ஆஸிக்கு புலம் பெயர்கின்றனர் - கூட்டமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com