Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணியில் எந்த விதத்திலும் உதவத் தயார் என்று, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மலேசியாவிலிருந்து சீனாவுக்குப் புறப்பட்ட மலேசிய விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மாயமானது. விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட போதும், விமானத்தைத் தேடிக் கண்டுப்பிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் மாயமான விமானத்தில் பயணித்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழையும் வழங்கிவிட மலேசிய அரசுத் தயாராகியுள்ளது. இருப்பினும் பயணிகளின் உறவினர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாயமான விமானத்தைத் தேடும் பணிகளில் எந்தவிதத்திலும் உதவத் தயார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

0 Responses to மலேசிய விமானத்தைத் தேடும் பணிக்கு எந்தவிதத்திலும் உதவத் தயார்!:ஒபாமா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com