காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேட அமெரிக்காவிலிருந்து புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய கப்பல் இந்தியப் பெருங்கடலுக்கு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 8ம் திகதி 239 பயணிகளுடன் காணாமல் போன மலேசிய விமானத்தை கடந்த ஒரு வாரமாக இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் தேடியும் எந்தவித துப்பும் இன்னமும் கிடக்கவில்லை. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய கப்பல் வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பலில் உள்ள நவீன தொழில் நுட்ப சாதனத்தில் கடலில் மூழ்கியிருக்கும் விமானத்தின் கறுப்புப் பெட்டியை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்றும் தெரிய வருகிறது.
விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டறியப்பட்டால் விமான விபத்துக்கான காரணம் தெரிந்துவிடும் என்கிற நிலையில், விமானத்தில் பயணித்த எவர் ஒருவர் மீதும் குற்றப்பின்னணி இல்லை என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளது.




0 Responses to மலேசிய விமானத்தைத் தேட புதியத் தொழில் நுட்பத்துடன் கூடிய கப்பல்!