Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உழைக்கும் மக்களின் உரிமை தினமான இன்றைய மே 1ம் திகதியை உழைக்கும் மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

உழைக்கும் மக்கள் தங்களுக்கு உரிமையான இத்தினத்தை சம்பளத்துடன் கூடிய விடுப்பு தினமாக கொண்டாடி மகிழ வருடாவருடம் இன்று அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் மே தின வாழ்த்து செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொது செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். தேசத்தின் முதுகெலும்பான தொழிலாளர்கள் நலனுக்கு ஏற்ற சட்ட திட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று பல தலைவர்களும் தங்களது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

0 Responses to இன்று மே மாதம் 1ம் திகதி உழைப்பாளர் தினமாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com