மார்ச் 8 ஆம் திகதி 239 பயணிகளுடன் மாயமான கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானத்தின் கதி பற்றிய முதல் கட்ட அறிக்கையை நாளை மலேசிய அரசு தாக்கல் செய்யும் என மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிசாமுதின் ஹிசான் அறிவித்துள்ளார்.
50 நாட்களுக்கும் அதிகமாக பல சர்வதேச நாடுகள் இந்து சமுத்திரத்தின் தென் பகுதியில் MH370 விமானத்தின் சேதமடைந்த பாகங்களைத் தேடும் பணியில் இன்னமும் ஈடுபட்டு வருகின்றன.
முக்கியமாக விமானத்தின் கறுப்புப் பெட்டியைத் தேடும் பணியில் அமெரிக்காவின் புளூபின் 21 என்ற நீர்மூழ்கி மற்றும் அவுஸ்திரேலியக் கப்பற் படைக் கப்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மோசமான வானிலை காரணமாக சில நாட்களாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த தேடுதல் பணி மறுபடியும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் விமானத்துக்கு என்ன நடந்திருக்கக் கூடும் என்ற உறுதிப் படுத்தப் பட்ட தகவல்கள் தவிர்த்து வேறு விபரங்கள் பயணிகளின் உறவினருக்கும் பொது மக்களுக்கும் தெரிவிக்கப் படாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கை சர்வதேச சிவில் ஏவியஷன் அமைப்புக்கு வழங்கப் பட்ட அறிக்கைக்கு இணையானது என்றும் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச சிவில் ஏவியஷன் அமைப்பான ICAO பொதுவாக எந்த ஒரு நாட்டினதும் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகி ஒரு மாதத்துக்குள் குறித்த நாட்டுக்கு விமான விபத்து பற்றி கிடைத்துள்ள உறுதியான தகவல்களை சமர்ப்பிக்கும் படி வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மாயமான மலேசிய விமானம் தொடர்பான முதல் கட்ட அறிக்கை நாளை மலேசிய அரசு தாக்கல்