இன்று பாஜகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடி நியமிக்கப்பட்டதும், அவர் நிகழ்த்திய முதலாவது மக்கள் உரை ஊடக கவனம் பெற்றுள்ளது.
அவர் பேசிய ஒவ்வொரு வரிகளுக்கும் பலத்த கரகோஷம் எழுந்துள்ளது. மிகவும் உணர்ச்சிவசமாக தனது உரையைத் தொடங்கிய மோடி பின்வருமாறு பேசினார்.
'எனக்கு ஆசி வழங்கிய அத்வானி மற்றும் ராஜ்நாத் இருவருக்கும் எனது நன்றிகள். எங்களிடம் இங்கு இப்போது இருப்பது பொறுப்புக்கள் மட்டுமே. வேறு எந்த பதவிகளிலும் நாங்கள் இல்லை. பதவிகளிலும் பார்க்க பொறுக்களே மிக உயர்ந்தவை. நான் ஒரு போதும் பதவிகளுக்கு பின்னால் செல்பவன் கிடையாது. நாங்கள் எங்களது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக பாடுபடத் தொடங்கவேண்டும்.
கடந்த வருடம் செப்.13ம் திகதி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நான் பரிந்துரைக்கப்பட்டேன். அடுத்த இரு நாட்களில் செப்.15ம் திகதி தொடக்கம் நான் மிகக் கடினமாக உழைக்கத் தொடங்கிவிட்டேன். கட்சியின் தொண்டனாக அன்றிலிருந்து இன்று வரை எனது ஒரு சிறிய நிமிடத்தைக் கூட நான் வீணாக்கவில்லை.
உண்மையில் அரசு என்பது என்ன? ஏழை மக்களை பற்றி சிந்திப்பதே ஒரு அரசு. ஏழைகளுக்காக வாழ்வதும், அவர்களுக்காக பணிபுரிவதுமே ஒரு அரசு. எனது புதிய மத்திய அரசை நான் ஏழைகளுக்காக அர்ப்பணிக்கிறேன். இந்த புதிய அரசு ஏழைகளுக்கானது. இளைஞர்களுக்கானது. தாய்மார்களுக்கானது. பெண்களுக்கானது. தலித்துக்களுக்கானது.
2019 இல் இந்தியாவின் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் வரை, நான் என்ன செய்தேன் என்பதனை அப்போது அறிக்கை அட்டையாக உங்கள் முன் காட்சிப்படுத்துவேன்.
நாங்கள் 2019 இல் மீண்டும் சந்திக்கும் போது நீங்கள் அதனைப் பார்ப்பீர்கள். நான் ஒரு போதும் எனக்காக வாழப் போவதில்லை. இந்நாட்டுக்காக வாழப்போகிறேன்" என மோடியின் உரை தொடர்ந்தது.

0 Responses to "இந்தியாவுக்காக என்ன செய்தேன் என்பதனை 2019 இல் அறிக்கையாக காண்பிக்கிறேன்": மோடியின் உணர்ச்சிகரமான உரை