Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மீது முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பொலிஸாரால் தொடுக்கப்பட்ட வழக்கொன்று சோடிக்கப்பட்டது என தீர்ப்பளிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்தின் முன் இன்று காலை துரைராசா ரவிகரனின் தலைமையில் காணாமல் போனோரை மையப்படுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும், அது நீதிமன்ற அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடிய செயலாகையால் அதை தடுத்து நிறுத்தவேண்டும் என்றும், இவ்வாறான தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ரவிகரன் திட்டமிட்டுள்ளதாகவும் பொலிசாரால் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை துரைராசா ரவிகரனுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன் பிரகாரம், இன்று நீதிமன்றத்தில் ஆஜரான அவர், “காணாமல் போனோர் எம்முடைய உறவுகள். அவர்களுக்காக ஆர்ப்பாட்டங்களும் மக்கள் எழுச்சிகளும் நடாத்தப்பட வேண்டும் என்பது எமது உரிமை. ஆனாலும், இன்று அது தொடர்பில் எதுவித திட்டத்தையும் தான் யாரிடமும் முன்வைக்கவில்லை. அத்தோடு, இன்று ஆர்ப்பாட்டம் என் தலைமையில் நடைபெறவிருக்கிறது என்று பொலிஸாரால் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டானது எதுவித ஆதாரப் பின்னணிகளுமின்றி சோடிக்கப்பட்டது“ என்றார்.

துரைராசா ரவிகரன் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் திரு.பரஞ்சோதி, இவ்வாறான குற்றச்சாட்டுகளில் எதுவித உண்மைத்தன்மையும் இல்லாததால் மேற்படி வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரினார். இதனையடுத்து, சோடிக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

0 Responses to வடக்கு மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் மீது பொலிஸால் சோடிக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com