Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விநியோகம் ஆகியவற்றில் இலங்கை கேந்திர நிலையமாக செயற்படுகிறது என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாக சபை முதல்வரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டுக்குள் போதைப்பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் சுங்கத் திணைக்களம், பொலிஸ் மற்றும் போதை ஒழிப்பு பிரிவு (நாகொடிக்) என்பவற்றுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றின் மீதான விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

போதைப்பொருள் விற்பனை, கடத்தல் என்பவற்றை கட்டுப்படுத்த அல்லது ஒழிக்க, எதிர்க்கட்சிக்கு இருக்கின்ற ஆர்வத்தைவிட அரசாங்கத்துக்கு கூடுதல் ஆர்வம் இருக்கிறது. போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் பாவனை தொடர்பாக 421 வழக்குகள் உயர் நீதிமன்றத்திலும், மாவட்ட நீதிமன்றங்களில் 585 வழக்குகளும் உள்ளன. போதைப்பொருள் கடத்தலோடு தொடர்புடைய 55 பேருக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டுள்ள துடன் 178 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன. 394 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to போதைப்பொருள் வர்த்தகத்தின் கேந்திரமாக இலங்கை செயற்படவில்லை: நிமல் சிறிபால டி சில்வா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com