Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நரேந்திரமோடி வரும் 26ம் தேதி அன்று இந்தியப்பிரதமராக பதவியேற்கிறார். இந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக உலகின் அனைத்து நாட்டு அதிபர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் மோடி.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததை தமிழுணர்வாளர்கள், நரேந்திரமோடி தமிழர்களுக்கு செய்த துரோகமாக நினைத்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ராஜபக்சேவை விடுத்த அழைப்பை திரும்ப பெற வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், மோடியும் பாஜகவும் ராஜபக்சேவுக்கு விடுத்த அழைப்பை திரும்ப பெறுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இந்நிலையில், மோடி பதவி ஏற்பு விழாவிற்கு வரும் ராஜபக்சே, தன்னுடன் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் வரவேண்டும் என்று எண்ணி, அவருக்கு அழைப்பு விடுத்தார்.  இந்த அழைப்பை விக்னேஸ்வரன் மறுத்துள்ளார்.

அவர் இது குறித்து இலங்கை அரசுக்கு எழுதிய கடிதத்தில், வடக்கு மாகாணத்தில் ராணுவ கட்டுப்பாட்டால் மக்கள் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.   ராஜபக்சேவின் அழைப்பை ஏற்றால் உண்மை நிலையை மறைத்ததாகிவிடும்.  ஆகவே, இந்தியாவிற்கு வரவில்லை’’ என்று மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராஜபக்சே விடுத்த அழைப்பை விக்னேஸ்வரன் நிராகரித்தார்.

0 Responses to மோடி விழாவிற்கு தன்னுடன் வருமாறு ராஜபக்சே அழைப்பு: நிராகரித்தார் விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com