தாம் பதவி ஏற்பதுக் குறித்த எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம் என்று, அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார்.
வட சென்னையில் அதிமுக தொண்டர் ஒருவர் ஜெயலலிதா பதவி ஏற்பதுக் குறித்த தவறான வதந்திகள் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டதாகத் தெரிய வருகிறது. இதையடுத்து இதற்கு மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ள ஜெயலலிதா, தாம் பதவி ஏற்பதுக் குறித்த எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம் என்று தொண்டர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நம்மை அரசியல் ரீதியாகப் பழி வாங்க நினைக்கும் அனைவரையும் வீழ்த்தி வெற்றி முகட்டில் நிற்கிறோம். இந்த நேரத்தில் மகிழ்ச்சியை ஆரவராமாகக் கொண்டாடாமல் வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதோடு மகிழ்ச்சிப் பெருமிதத்தோடு வழிக்காட்டுதல் நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
0 Responses to தாம் பதவி ஏற்பதுக் குறித்த எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம்: ஜெயலலிதா