Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தலித் சிறுமி நந்தினி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சற்று தாமதாக என் கவலையை தெரிவிப்பதற்கு மன்னிப்பு கோருகிறேன் என்றுநடிகர் கம்ஹாஸன் ட்வீட் செய்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டிவிட்டர் பக்கதில் நந்தினிக்கு நீதி கிடைக்க வேண்டும். காவியோ, காதியோ, பச்சையோ, வெள்ளையோ, சிவப்போ அல்லது கருப்போ.. அது விஷயமில்லை. குற்றங்கள் நடப்பதற்கு கடவுள் காரணமில்லை.

நான் முதலில் மனிதன். இரண்டாவதாக நான் இந்தியன். இந்த விவகாரம் தொடர்பாக, சற்று தாமதாக என் கவலையை தெரிவிப்பதற்கு மன்னிப்பு கோருகிறேன். என் கோரிக்கை நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எனக் குறிப்பிட்டுள்ளார். சமீப காலமாக சமூகப் பிரச்சனைகளுக்கு கமல்ஹாசன் குரல் கொடுத்து வருவதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

0 Responses to நந்தினி கொலை தொடர்பில் சற்று தாமதாக என் கவலையை தெரிவிப்பதற்கு மன்னிப்பு கோருகிறேன்: கமல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com