எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ உறவுகளே!
கதிரவனின் துணையின்றி இவ்வுலகம் சுற்றாது அது போல் உழைப்பாளிகள் இல்லாமல் ஓர் தேசம் வளர்ச்சியடையாது. தேசத்தின் உயர்வுக்காக வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளருக்கு தொழிளாலர் தினத்தில் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு தனது புரட்சிகரமான வாழ்த்துகளை தெரிவிக்கின்றது .
சிறீலங்கா அரசின் பேரினவாதத்தின் இன அழிப்பால் தமிழீழத்தை பிரிந்து தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றாலும் தாம் புலம்பெயர்ந்து வாழும் நாட்டு மக்களுடன் இணைந்து உழைத்து தாம் புலம்பெயர்ந்து வாழும் நாட்டின் வளர்சிக்கு துணை புரிந்து, தமிழீழத் தமிழர்களின் உழைக்கும் திறனை வெளிப்படுத்தி எமது தாய் நாட்டுக்கும் தமிழீழத் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கின்றனர் என்பதை யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு பெருமையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.
சிங்கள பேரினவாதத்தின் திட்டமிட்ட இன அழிப்பால் தமிழீழத்தில் வாழும் எமது மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு தொழில் வாய்ப்புகள் சீரழிந்து தமிழரின் பொருளாதாரம் சிதைவடைகின்றது. ஓர் இனத்தின் பொருளாதாரம் அழிந்தால் அவ்வினத்தின் எதிர்காலம் பாதிக்கப்படும் என சர்வதேசத்திற்கு இவ்வறிக்கையூடாக நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இனவழிப்பு செய்த நாட்டுடன் என்றுமே சேர்ந்து வாழ முடியாது என்பதற்கு அமைய சர்வதேச நாடுகள் தமிழீழ தனியரசை அங்கீகரித்து தமிழர்கள் தமது தாய் நாட்டில் கௌரவத்துடன் உழைத்து உயர்ந்து வாழ்வதற்கு உதவ முன்வரவேண்டுமென தமிழ் இளையோர் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.
மேலும் நேற்று தொழிளாலர் தினத்தில் யேர்மனிய மக்களுடன் இணைந்து தமிழீழ மக்களும் லண்டவ் (Landau), பேர்லின் (Berlin), கம்புர்க் (Hamburg), சார்புறுக்கன் (Saarbrücken), பிரேமன் (Bremen), டுச்செல்டோர்ப் ( Düsseldorf), பிராங்போர்ட் (Frankfurt am Main), ஸ்டுட்கார்ட் (Stuttgart), கனோவர் (Hannover) நகரங்களில் நடைபெற்ற தொழிளாலர் தினத்தில் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் பதாதைகளை தாங்கியும் "தமிழீழம் என்றும் எம் இதையத்தோடு .." எனும் துண்டுபிரசுரங்களை வழங்கியும் தமிழின அழிப்பை வேற்றின மக்களுக்கு தெளிவுபடுத்தினார்கள்.
பிராங்போர்ட் நகரில் நடைபெற்ற தொழிளாலர் தினத்தில் தமிழ் இளையோர் பிராங்போர்ட் நகரபிதாவை சந்தித்து தமிழர்கள் மீது சிங்கள பேரினவாதத்தால் நடாத்தப்படும் இனவழிப்பு மற்றும் தொடர்சியான அவலநிலை குறித்து பிராங்போர்ட் (Frankfurt am Main) நகரபிதாவுடன் கலந்துரையாடப்பட்டது. லண்டவ் (Landau) நகரில் நடைபெற்ற தொழிளாலர் தினத்தில் ஈழத் தமிழர் சார்பாக உரையாற்றப்பட்டது.
நன்றி.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி.
0 Responses to தொழிளாலர் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் இன அழிப்புக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள்