Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 48 மணித்தியால சர்வதேச போட்டியில் பங்கு பற்றிய அணிகளின் படங்கள் நேற்று யாழ். ராஜா திரையரங்கில் திரையிடப்பட்டு, வெற்றியாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

இப்போட்டியில் கலந்து கொண்ட படங்களில் மதிசுதாவின் ராஜேஸ்டோன் அணியினது "குறுவட்டு" குறும்படம் சிறந்த திரைக்கதைக்கான விருதினையும், சிறந்த படத்துக்கான விருதினையும் பெற்றிருக்கிறது.  சிறந்த நடிகருக்கான விருது சப்தமி அணியின்  சுலக்சன் பெற்றிருந்தார். Trinco Creation அணியினரின் “இது” குறும்படம் வழங்கப்பட்ட கருப்பொருளை சரியாக உபயோகப்படுத்திக்கொண்டமை, முறையான பாத்திரத் தேர்வு என்பவற்றுக்கான விருதுகளைப் பெற்றுக் கொண்டது.

உலகின் 120 நகரங்களில் நடைபெறும் இப்போட்டியின் நடுவர்களாக  இந்திய மற்றும் சிங்கப்பூர் கலைஞர்கள் செயற்பட்டார்கள். www.48hourfilm.com எனும் முகவரியில் இச் சர்வதேச போட்டி குறித்த விபரங்களைக் காணலாம். இப்போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் கிடைக்கப்பெற்ற அனுபவங்கள் தமது எதிர்கால முயற்சிக்களுக்கு பயனளிப்பதாகவிருக்கும் எனப் பொட்டியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இப்போட்டியில் கலந்து கொள்வதற்காகத் தயாரிக்கப்பட்ட கதை ஒளி அணியினரின் " வச்சாக் குடும்பி " போட்டி விதிகளுக்கமைவாக குறிப்பிட்ட நேரத்தில் தரவேற்றம் செய்யத் தவறியதால் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை இழந்தது. 3 நிமிடத் தாமதத்தில் இந்த வாய்ப்பினை இழந்த போதும், 60 பேர் வரையில் இந்த அணியின் படஉருவாக்கத்தில் செயற்பட்டுள்ளார்கள். அவர்கள் தமது செயற்பாட்டினை போட்டிக்கான தயாரிப்பு என்பதற்கும் அப்பால், முறையான துறைசார் பயிற்சிக் களமாகவும் இதனைப் பாவித்துக் கொண்டார்கள். அது தொடர்பான பயிற்சிகளின் பதிவுகளையும், அவர்களது குறும்படத்தினையும் தற்போது வெளியிட்டுள்ளார்கள்.

தென்னிந்தியச் சினிமா ஆளுகையிலும், முன் முயற்சிகளுக்கான ஆதரவுகளும் அற்ற நிலையில் நலிந்து வரும் இலங்கைத் தமிழ்த்திரையுலகிற்கு இவ்வாறான முயற்சிகள் நம்பிக்கை தருவதாக அமைகின்றன. முயற்சித்தவர்களுக்கும், முன்னிலையில் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் !

மலைநாடான்

0 Responses to ஈழத்துச் சினிமா: முயற்சித் திருவினை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com