வாக்கு எண்ணிக்கையில் அதிமுக 37 இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா, வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி இது என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
கட்சியின் வெற்றிக்காக பாடுப்பட்ட கழகத் தோழர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் ஜெயலலிதா.மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்னமும் முழுமையாகத் தெரிவிக்கப்படாத நிலையில் பாதைகள் தெளிவாக இருப்பதால் இப்போது தமிழக மக்களுக்கு நன்றி கூற செய்தியாளர்களை சந்தித்ததாக கூறியுள்ளார் அவர்.அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதாக கூறியுள்ளார்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று இந்த முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தோல்வியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.

0 Responses to வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி இது!:ஜெயலலிதா