ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் அரசு தரப்பின் இறுதிக்கட்ட வாதம் நேற்றுடன் நிறைவடைந்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டவர்களின் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அரசு தரப்பு வழக்கறிஞர் நேற்று தமது இறுதிக்கட்ட வாதத்தை முடித்துள்ளார். திமுக சார்பான அன்பழகன் தரப்பு இறுதிக் கட்ட வாதமும் எழுத்துப்பூர்வமாக நேற்று வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஜெயலலிதா தரப்பு இறுதிக்கட்ட வாதத்தை எடுத்து வைக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய தனியார் நிறுவனங்களின் வழக்கை முடித்துவிட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கின் மீதான தீர்ப்பும் இன்று வெளிவரவுள்ளது குறிப்பிடத் தக்கது.

0 Responses to ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வாதம் முடிந்தது!