Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல் களமான முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு தினம் (மே 18) இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நிலையில், வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரும், பொலிஸாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் நல்லூர் கந்தசுவாமி கோவிலைச் சுற்றியுள்ள வீதிகள் மற்றும் இடங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நேற்று சனிக்கிழமை தொடக்கம் குவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அங்கு பதற்றமான நிலைமை காணப்படுவதாக பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனின் திருநெல்வேலியில் அமைந்துள்ள வீட்டிற்கு அருகிலும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

இதனிடையே, வடக்கின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரும், பொலிஸாரும் பொது இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் எதனையும் நடத்த வேண்டாம் என்று பொது மக்களை அறிவுறுத்தியுள்ளதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

0 Responses to முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு தினம் இன்று: வடக்கில் இராணுவமும் குவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com