Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெள்ளிக்கிழமை பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஒன்று கூடிய ஆப்பிரிக்கத் தலைவர்கள் ஏகமனதாக நைஜீரியாவின் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் மீது யுத்தப் பிரகடனம் செய்துள்ளனர்.

பாரிஸ் மாநாட்டினை வழிநடத்திய பிரான்ஸ் அதிபர் ஹொல்லான்டே கூறுகையில் ஆப்பிரிக்க சக்திகள் போக்கோ ஹராம் இற்கு எதிராக கூட்டு நடவடிக்கை மற்றும் புலனாய்வு பகிர்வுகளை மேற்கொள்ள முடிவு எடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் 223 பள்ளி மாணவிகளைக் கடத்திச் சென்றதுடன் நைஜீரிய கமெரூன் எல்லைகளில் தாக்குதலிலும் ஈடுபட்டனர். கடந்த சில வருடங்களாக இத்தீவிரவாதிகளின் தாக்குதலில் ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்களை ஒடுக்குவதற்காக பாரிஸில் கூட்டப் பட்ட மாநாட்டில் நைஜீரிய அதிபர் குட்லுக் ஜொனாதனுடன் பெனின்,கமெரூன்,நைகர் மற்றும் சாட் அதிபர்கள் பங்கேற்று இருந்தனர். இம்மாநாட்டு முடிவில் பிரெஞ்சு அதிபர் ஹொல்லான்டே கூறுகையில், 'போக்கோ ஹராம் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும் வட ஆப்பிரிக்க அல்-கொய்தா கிளையுடன் இதற்குத் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்கத் தலைவர்கள் போக்கோ ஹராம் மீது யுத்தப் பிரகடனம் செய்து சில மணி நேரங்களுக்குள் வடகிழக்கு நைஜீரியாவின் சந்தைப் பகுதியில் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்து 29 பேரைக் கொன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to நைஜீரியாவின் போக்கோ ஹராம் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்பிரிக்கத் தலைவர்கள் யுத்தப் பிரகடனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com