Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகம் எங்கும் வாழும் தமிழீழ உறவுகளே ,புலம்பெயர் வாழ் ஈழத்து தமிழர்களே உங்கள்  கடமையை மீண்டும் நினைவூட்ட தான் ஈழத் தமிழினப் படுகொலையின் ஐந்தாம் ஆண்டுகள் முடிந்திருக்கின்ற இந்த வேளையில், ஐந்தாம் ஆண்டு உறுதி எடுக்கும் நாள் சபதம் ஏற்கும் நாள் சூழ்லுரை மேற்கொள்ளும் நாள். சுதந்திர தமிழீழ தேசம் என்பது வரலாற்று கட்டாயம் மட்டும் அல்ல ,எவராலும் மறுக்க முடியாத நியாயம்.

ஐந்து ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன. உலக வரலாற்றில் ரத்தமும் கண்ணீரும் நிறுவிய ஏடாக ஐந்தாவது தமிழின அழிப்பு நாள் மட்டும் அல்ல இது சூழ்லுரைக்கும் நாள் . எந்த லெச்சியத்துக்காக எண்ணற்றவர்கள் மடிந்தார்களோ ரத்தம் சிந்தினார்களோ ஏங்கி தவித்தோமோ கண்ணீரிலே கதறி அழுதோமோ அந்த கனவுகள் நனவாகி சுதந்திர தமிழீழ தேசம் மலரும் காலத்தில் புலம்பெயர் மக்களுக்கு வேலை அதிகம் கடமை அதிகம் என  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தமிழின அழிப்பு நாளுக்கான அழைப்பை விடுத்துள்ளார்.


0 Responses to தமிழின அழிப்பு நாளில் சபதம் ஏற்போம் - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com