Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடமாகாணசபையின் கைதடியிலுள்ள பேரவை கட்டிடம் முன்பதாக இன்று ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரினை ஒரு சில வினாடிகளினில் காலால் மிதித்து அணைத்தனர் இலங்கைப்பொலிஸார்.

அறிவிக்கப்பட்ட படி வடமாகாணசபையின் உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் வடமாகாணசபையினுள் நினைவேந்தல் நிகழ்வினை நடத்த உள்ளே செல்ல முற்பட்டனர். எனினும் அதனை தடுக்கும் வகையினில் பிரதான நுழைவாயில்கள் பூட்டப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்து.

அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.எனினும் தாம் மாகாணசபை உறுப்பினர்கள் என அடையாளப்படுத்தி அவர்கள் உள்ளே செல்ல முற்பட்டனர்.அதற்கும் அனுமதி வழங்கப்படாது இன்று மாகாணசபைக்கு விடுமுறையென தெரிவிக்கப்பட்டதுடன் அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்க முற்பட்டனர்.

இந்நிலையினில் தம்மால் எடுத்துவரப்பட்ட சுடரினை பேரவைக்கு முன்னதாக சிவாஜிலிங்கம் ஏற்ற முற்பட்டார்.எனினும் சுடரை ஏற்றிய சில வினாடிகளினில் அங்கு பாய்ந்து வந்த பொலிஸ் உயரதிகாரியொருவரை அதனை தள்ளிவீழ்த்தி கால்களினால் மிதித்தார்.அவருடன் இணைந்து ஏனைய பொலிஸாரும் தீபத்தை கால்களால் மிதித்து அணைத்தனர்.

எனினும் இவை எதனையும் பொருட்படுத்தாது பீறிட்டு வந்த கண்ணீருடனேயே முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளிற்கு மௌன அஞ்சலியை அவர்கள் செலுத்தினர்.அங்கு அஞ்சலி நினைவுரைகளை ஆற்றிய கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் இங்கு நிலவும் அராஜகங்களை சர்வதேசமும் புலம்பெயர் உறவுகளும் புரிந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.

இதனிடையே வடமாகாணசபையின் மற்றொரு பெண் உறுப்பினர் மேரிகமலா முல்லைத்தீவிலிருந்து வருகை தந்து அஞ்சலியினில் கலந்து கொண்டார்.எனினும் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் விடுமறையென வீட்டினில் இருந்து கொண்டதாக பணியாளர்கள் தரப்பினில் தெரிவிக்கப்பட்டது.

ஏனைய அமைச்சர்களோ உறுப்பினர்களோ கலந்து கொள்ளாமை பங்கெடுத்த பொதுமக்களிடையே கடுமையான விமர்சனங்களை தோற்றுவித்திருந்தது. வலி.வடக்கு பிரதேச சபைதலைவர் ச.சஜீவன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை பிரதி தலைவர் ந.சதீஸ் ஆகியோரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

0 Responses to வடமாகாணசபையினில் தீபம்! காலால் மிதித்து அணைத்தனர் பொலிஸார்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com