Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மனித உரிமைகளை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கம் உள்ளுர் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். 

நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, பான் கீ மூனின் உதவி பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் இதனைத் தெரிவித்துள்ளார். 

சர்வதேச சமூகத்துடன் இலங்கை அரசாங்கம் ஒத்துழைத்து செயற்பட வேண்டும்.

இலங்கையின் முன்னாள் யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தும் மனித உரிமைகள் ஆணையாளரின் முயற்சி இலகுவான செயற்பாடு அல்ல. இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளுக்கு முன்னுரிமையும், மதிப்பும் வழங்க வேண்டும் என்று பான் கீ மூன் கருதுவதாக அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 Responses to மனித உரிமைகளை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கம் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் - பான் கீ மூன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com