Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுன்னாகம் நொதேர்ன் பவர் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 1.3 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், குறித்த பகுதி நிலத்தடி நீர் மனிதப் பாவனைக்கு உகந்ததல்ல என்று தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மல்லாகம் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதனால், நொதேர்ன் பவர் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 1.3 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திலுள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகத்தைச் செய்யவுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

சுன்னாகம் உள்ளிட்ட இடங்களில் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்தமை குறித்த வழக்கு மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதன்போது தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

சுன்னாகம் பகுதியில் எழுமாற்றாகச் சில கிணறுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிலுள் தண்ணீரை மீண்டும் ஆய்வு செய்யவுள்ளதாகத் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை நீதிமன்றத்துக்கு கடந்த வருடம் கூறியிருந்தது. அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

அதன்பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையிலேயே கழிவு எண்ணெய் கலப்பு விவகாரம் உறுதிப்படுத்தியுள்ளது. 42 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை நீதிவான் ஆராய்ந்து அது தொடர்பில் விரைவில் தீர்ப்பளிக்கவுள்ளார்.

0 Responses to சுன்னாகம் பகுதியில் கழிவு எண்ணெய் கலப்பு உண்மையே; தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com